என் தந்தை தோனியை திட்டியது ஏன்..? யுவராஜ் சிங் சொன்ன அதிர்ச்சி காரணம்..!!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனியை, யுவராஜ் சிங்கின் தந்தையை கடுமையாக விமர்சித்திருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. யுவராஜ் சிங் கிரிக்கெட் வாழ்க்கையின் சரிவுக்கு தோனி தான் காரணம் என்று அவருடைய தந்தை யோக்ராஜ் சிங் கடும் விமர்சனத்தை முன்வைத்திருந்தார். யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதற்கு பின்னணியில் தோனி இருக்கிறார் என்றும் பல கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்நிலையில், தோனி குறித்து அண்மையில் பேசிய யோக்ராஜ் சிங், நான் தோனியை என்றுமே மன்னிக்க மாட்டேன். தோனி தான் என் மகனின் வாழ்க்கையை அழித்துவிட்டார். தோனி நினைத்திருந்தால் யுவராஜ் சிங் இன்னும் நான்கு ஐந்து ஆண்டுகள் விளையாடி இருக்கலாம். என் மகனைப் போல் ஒருவரை உங்களால் பெற்று எடுக்க முடியுமா? என கடுமையாக திட்டி இருந்தார். யோக்ராஜ் தொடர்ந்து இவ்வாறு பேசி வரும் நிலையில், தனது தந்தையை யுவராஜ் சிங் தடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருந்தது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் ஒரு நேர்காணலில் பங்கேற்ற யுவராஜ் சிங் தனது தந்தை குறித்து பேசியிருந்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், தமது தந்தை ஒரு மெண்டல் என்றும் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும் தமக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை அவர் ஒப்புக்கொள்ள மாட்டார் என்று தெரிவித்துள்ள யுவராஜ், இந்த விஷயம் குறித்து தனது தந்தை தான் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், அவர் அதை ஒப்புக்கொள்ளவே மாட்டார் என்று கூறி இருக்கிறார்.
Read More : டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் ஏ தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு..!! எப்படி பதிவிறக்கம் செய்வது..?