கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எதுக்கு சிபிஐ விசாரணை..? கொடநாடு நிலவரம் என்ன..? முதல்வர் முக.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்..!!
மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் பேசுகையில், “கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 24 மணி நேரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அரசின் நடவடிக்கைகள் போதவில்லை என எதிர்க்கட்சிகள் கூறுவது தோல்வியை மறைக்கும் முயற்சி மற்றும் திசை திருப்பும் நாடகம். வழக்கு விசாரணையில் நாங்கள் எதை மறைத்தோம் சிபிஐ விசாரணையை கோருவதற்கு?
முழுமையாக அரசு விசாரித்து வருகிறது. ஒருவர் கூட தப்பாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாராய விற்பனை நடந்தால் மாவட்ட காவல்துறை அதிகாரி பொறுப்பேற்க வேண்டும் என சொல்லி இருக்கிறேன்” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அவர் பேசுகையில், “கொடநாடு வழக்கில் இதுவரை 268 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொடநாடு வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்புள்ளதா என விசாரிக்க இன்டர்போல் உதவியை நாடியுள்ளோம்” என விளக்கம் அளித்தார்.
Read More : BREAKING | கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை..!! மசோதா தாக்கல்..!!