முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’எதுக்கு வீடியோ எடுக்குறீங்க’..? டென்ஷன் ஆன நடிகை கனகா..!! தற்போதைய நிலையை பாருங்க..!!

10:39 AM Apr 18, 2024 IST | Chella
Advertisement

நடிகை கனகாவிடம் யூடியூபர் ஒருவர், அவர் வீட்டு வாசலில் வைத்து உங்களை பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்டபோது அதற்கு கோபமாக கனகா பதில் அளித்திருந்த நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

80 காலகட்டத்தில் தொடங்கி 90ஸ் காலத்தில் உச்சத்தில் இருந்த நடிகை கனகா, சினிமாவை விட்டு திடீரென விலகினார். இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து இவருக்கு ரசிகர்களாக மாறிய இளைஞர்கள் ஏராளம். இத்திரைப்படம் வெளியாகி எத்தனையோ வருடங்களாகி இருந்தாலும் கரகாட்டக்காரன் திரைப்படம் பார்க்கும்போது இப்போதும் கனகாவை தேடிக் கொண்டிருக்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

புகழின் உச்சத்தில் வலம் வந்த நடிகை கனகா, அவருக்கு தொடர்ச்சியாக வந்த ஏமாற்றங்கள் மற்றும் கஷ்டங்கள் காரணமாகவே சினிமாவை விட்டு விலகி வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கிறார். சில ஆண்டுகளாகவே அவர் பற்றிய செய்திகள் பெரிய அளவில் இல்லாமல் இருக்கும் நிலையில், ஒரு சில யூடியூபர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் கனகாவின் கடந்த கால வாழ்க்கையை குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

இப்படியான நிலையில், சில நாட்களுக்கு முன்பு நடிகை கனகா வெளியே சென்று விட்டு தன்னுடைய வீட்டு வாசலில் கதவை திறக்க நின்று கொண்டிருந்தபோது அந்தப் பக்கமாக சென்ற ஒரு யூடியூபர் கனகாவை வீடியோ எடுத்து இருக்கிறார். அவரிடம் கனகா, என்னை எதற்காக வீடியோ எடுக்குறீங்க என்று கோபப்பட்ட போது மேடம் உங்ககிட்ட ஒரு இன்டர்வியூ கிடைக்குமா? என்று கேட்க, அதற்கு நான் என்ன ஆஸ்கார் அவார்டு வாங்கின நடிகையா? எதற்காக இப்படி பண்ணுறீங்க? என்று அதட்டி இருக்கிறார்.

அதற்கு அந்த யூடியூபர் நீங்க உங்க செல்ஃபி போட்டோஸ், வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் போட்டு இருந்தீங்களே என்று சொல்ல, அதற்கு அப்படி போட்டால் உங்களுக்கு பேட்டி கொடுக்கணுமா என்ன? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More : கைகளில் மருதாணி, மெஹந்தி போட்டிருந்தால் வாக்களிக்க முடியாதா..? தீயாய் பரவும் தகவல் உண்மையா..?

Advertisement
Next Article