ரயிலில் இதெல்லாம் ஏன் திருடப்படுவதில்லை?… எப்போதாவது இதை யோசித்திருக்கிறீர்களா?… காரணங்கள் இதோ!
உலகம் முழுவதும் திருட்டுகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. டிஜிட்டல் மயமாக மாறிவரும் நிலையிலும், கொள்ளை சம்பவம் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கின்றனர். ஆனால் ரயிலில் உள்ள எந்த பொருளும் திருடப்பட்டதாக செய்தியை பார்த்திருக்க மாட்டீர்கள். ?அது ஏன் தெரியுமா? அதன் பொருட்கள் மட்டும் ஏன் திருடப்படுவதில்லை? அப்படி என்ன இதில் வித்தியாசம் இருக்கிறது என்று யோசித்ததுண்டா?
ரயில்களில் மின்விசிறிகள், பல்புகள் போன்ற சாதனங்களை திருடர்கள் திருடுவதைத் தடுக்க இந்திய ரயில்வே சில நுணுக்கங்களைக் கடைப்பிடித்துள்ளது. மேலும், ரயிலில் உள்ள மின் விளக்குகள், மின்விசிறிகள் போன்றவற்றை திருடர்கள் திருடிச் சென்றாலும், அவற்றை வெளியில் எங்கும் பயன்படுத்த முடியாது.
காரணம் இவை அனைத்தும் 110 வோல்ட் ஆற்றல் கொண்ட சாதனங்கள். ரயில் மற்றும் ரயில்வே தொடர்பான விஷயங்களில் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். அதே சமயம் இந்த 110 வோல்ட் பவர் சார்ஜர்களில் சார்ஜ் செய்வது சற்று கடினம். ஆனால் ரயில் பயணிகள் அவசர தேவைக்காக மட்டும் செல்போன் மற்றும் லேப்டாப்களை சார்ஜ் செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சாக்கெட்டில் சார்ஜ் செய்வது நாம் வீட்டில் சார்ஜ் செய்வதை விட மெதுவாக சார்ஜ் செய்யும். இன்றைய காலத்தில் மக்கள் பயன்படுத்தும் செல்போன், லேப்டாப் போன்ற சாதனங்களுக்கான சார்ஜர்கள் குறைந்தது 100 வோல்ட் மின்சாரம் போதுமானது. அதன் முழு வேகத்தில் செயல்பட 230 வோல்ட் மின்சாரம் தேவைப்படும்.
இன்று பயன்பாட்டில் உள்ள பல மிக்சி மற்றும் கிரைண்டர்கள் குறைந்தபட்சம் 210 வோல்ட் மின்சாரத்தில் மட்டுமே வேலை செய்யும். ரயில்வே 230 வோல்ட்டுக்கு பதிலாக 110 வோல்ட் வழங்குவதற்கு முக்கிய காரணம் திருடப்படுவதை தடுக்கத்தான். பெரும்பாலான திருடர்களுக்கு இது ஏற்கனவே தெரியும். எனவே ரயிலின் மின்விசிறி பல்பை திருடி எந்த ஒரு திருடனும் நேரத்தை வீணடிக்க மாட்டார்.