புதிதாக யாருக்கெல்லாம் ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்கும்..? வெளியான சூப்பர் குட் நியூஸ்..!!
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவதற்கான விண்ணப்பம் விரைவில் வழங்கப்பட உள்ளன. யாருக்கெல்லாம் விண்ணப்பம் வழங்கப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
அதன்படி, புதிதாக இரண்டரை லட்சம் பேருக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. அதில், 2 லட்சம் பேருக்கு வழங்கப்படும். இந்த வார இறுதியில் முதல் கட்ட பணிகள் இதற்காக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், 20ஆம் தேதி விண்ணப்பம் வழங்கப்படலாம். ஜூலை 1ஆம் தேதி விண்ணப்பம் வாங்கப்பட்டு ஜூலை 10ஆம் தேதிக்குள் பரிசீலனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதில் புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புது ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோர்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இதன் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையில் தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், இந்த மாதம் இதே திட்டம் மறுவாழ்வு முகாம் பெண்களுக்கும் விரிவுபடுத்தபட்டுள்ளது. அதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் இதுவரை விடுபட்ட பெண்களுக்கும் பணம் அனுப்பப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் பணம் வழங்கப்படும்..?
1. முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படலாம்.
2, முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கு
3. புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு
4. புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு பணம் வழங்கப்படலாம்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்ட நிலையில், 90 சதவீத மகளிருக்கு உரிமைத்தொகை சென்று சேர்ந்துவிட்டது என்றும், தகுதியான ஒருசிலர் விடுபட்டு இருந்தால் அந்த பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க திமுகவினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் மேலும் சில பயனாளிகளுக்கு பணம் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்தான் இந்த திட்டத்தில் மீண்டும் சேர 11.8 லட்சம் பேர் மறு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். அக்டோபர் இறுதிவரை இவர்கள் கொடுத்தனர். இப்போது 1.7 கோடி பேருக்கு இந்த பணம் தற்போது கொடுக்கப்பட்டு வருகிறது.
Read More : ’உடம்பில் ஒட்டு துணி கிடையாது’..!! ’அந்த இடத்தில் ஐஸ்கிரீம்’..!! நடிகை தமன்னாவின் நிர்வாணப் படம்..!!