அடுத்த பாஜக தேசிய தலைவர் யார்?… RSS-யை சேர்ந்தவருக்கு வாய்ப்பா?
BJP National Leader? நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றிகரமாக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பதவியேற்றுள்ளது. ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் மோடியைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் அடுத்தடுத்து பதவியேற்றனர். இந்த வரிசையில் நிதின் கட்காரியைத் தொடர்ந்து ஜெ.பி.நட்டா பதவியேற்றார்.
பாஜகவின் தேசிய தலைவரான நட்டா மத்திய அமைச்சராக பதவி பிரமாணம் மேற்கொண்டிருப்பதால், கட்சியின் அடுத்த தேசிய தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மோடியின் 2014 ஆட்சியின் போது மத்திய அமைச்சராக இருந்த நட்டா, தற்போது மோடியின் மூன்றாவது ஆட்சியில் மீண்டும் அமைச்சரவைக்குத் திரும்புகிறார். ஜெ.பி.நட்டாவின் தலைமையில் பாஜக பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. முன்னதாக கட்சியின் தலைவராக அமித் ஷா காட்டிய வேகம், நட்டாவிடம் கிடைக்கப்பெறவில்லை.இதனால், புதிய தேசிய தலைவர் பாஜகவில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். ஆனால் அவர் யார் என்பதுதான் பாஜகவினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக நீடித்து வருகிறது.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதனால், அவருக்கு பதில் ம.பி. முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தேசிய தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. ஆனால், திடீர் திருப்பமான அவரும் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனால் அடுத்த புதிய தலைவர் யார் என்பதில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல்களின்படி, ஆர்.எஸ்.எஸ்.-யை சேர்ந்தவருக்கு தேசிய தலைவர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகின்றன. இருப்பினும், பாஜக சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகே புதிய தலைவர் யார் என்பது தெரியவரும்.
Readmore: வீட்டில் எந்நேரமும் உட்கார்ந்தே வேலை செய்பவரா நீங்கள்..? கண்டிப்பா தினமும் இதை பண்ணுங்க..!!