முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பூமியில் விழுந்த விண்கல் யாருக்குச் சொந்தம்? நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு...

06:28 PM Mar 26, 2024 IST | Baskar
Advertisement

விண்வெளியில் இருந்து விழுந்த அரிய விண்கல் தொடர்பான சட்டப் போராட்டத்தில், நில உரிமையாளருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

ஸ்வீடனில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, 2020 நவம்பரில் விண்வெளியில் இருந்து விழுந்த விண்கல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த இரும்பு விண்கல் தனியார் நிலத்தில் மீது விழுந்தது. அங்கு தான் ஒரு சிக்கல் உண்டானது.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் விழுந்த இந்த விண்கல்லின் உரிமையாளர் யார் என்பது குறித்து நீதிமன்றத்தில் போராட்டம் வெடித்துள்ளது. விண்கற்களை கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் பகுதியில் உள்ள பல கமெராக்கள் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நீண்ட நீதிமன்றப் போராட்டம் தொடங்கியது.

இந்நிலையில் நில உரிமையாளருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், ​​மற்றொரு திருப்பமாக விஞ்ஞானிகளுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த முந்தைய தீர்ப்பையும் ரத்து செய்தது. இதையடுத்து, இந்த வழக்கை ஸ்வீடனின் உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதா இல்லையா என்பதை புவியியலாளர்கள் முடிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
Next Article