For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"மிக்ஜாம்" என்று புயலுக்கு பெயர் வைத்தது யார்..! காரணம் என்ன..?

10:33 AM Dec 02, 2023 IST | 1Newsnation_Admin
 மிக்ஜாம்  என்று புயலுக்கு பெயர் வைத்தது யார்    காரணம் என்ன
Advertisement

சென்னையில் உள்ள மக்களுக்கு தற்போது தெளிவாக பரிச்சயம் ஆகியுள்ள பெயர்தான் "மிக்ஜாம்". வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகவுள்ள புயலுக்கு வானிலை ஆய்வு மையம் சூட்டப்படும் பெயர் தான் இது. பொதுவாக புயல் என்றால் நம் நினைவுக்கு வரும் பெயர்கள் வர்தா புயல், கஜா புயல், தானே புயல் ஆகியவை ஆகும், அவை ஏற்படுத்திய சேதங்களும் இன்று வரை மறக்க முடியாதவையாக இருக்கிறது.

Advertisement

ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்களும் ஏற்படலாம். சில சமயத்தில் ஒரே புயல் ஒரு வாரம் கூட இருக்கலாம், எனவே குழப்பங்களை தவிர்க்க பெயர்கள் வைக்கப்படுகின்றன. இந்த புயல்களுக்கு உலக வானிலை அமைப்பான WMO மற்றும் ESCAP எனப்படும் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் பெயர்களை சூட்டுகின்றன.

பொதுவாக இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு எழுத்து வரிசைப்படி, ஆண் மற்றும் பெண் பெயர்கள் மாறி மாறி வைக்கப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் வடக்கு இந்திய பெருங்கடல் பகுதியை ஒட்டிய நாடுகள், கடந்த 2000 ஆண்டு முதல் புயல்களுக்கு பெயர் வைப்பதில் புதிய வழிமுறைகளை பின்பற்ற தொடங்கின. நாடுகள் வாரியாக எழுத்து வரிசைப்படி அந்த பெயர்கள் பட்டியலிடப்படும். அதில் இருபாலின பெயர்களும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வங்கக்கடலில் அடுத்து உருவாகவுள்ள புயலுக்கு மிக்ஜாம் என்ற பெயரிடப்படுகிறது. இந்த "மிக்ஜாம்" பெயரை பரிந்துரைத்த நாடு மியான்மர். மிக்ஜாம் பெயரின் அர்த்தம் என்னவென்று பார்த்தால், மியான்மர் நாட்டின் chin state அதாவது மேற்கு பகுதியில் இருக்கக்கூடிய மாநிலம் தான் "சின்". அந்த மாநிலத்தில் ஓடக்கூடிய ஆற்றின் பெயர் தான் "மிக்ஜாம்", அந்த பெயரை தான் தற்போது அவர்கள் இந்த புயலுக்கு பரிந்துரைத்து இருக்கின்றனர்.

Tags :
Advertisement