PMO MODI | "யார் அந்த கத்துக்குட்டி.?"… கேமர்களுடன் நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகளை சீண்டிய பிரதமர் மோடி.!
PMO MODI: இந்தியாவின் தலைசிறந்த வீடியோ கேமர்களுடன் நேரலை உரையாடலில் கலந்து கொண்ட பிரதமர் மோடி எதிர்க்கட்சியினரை கத்துக்குட்டி என்று பொருள்படும் நூப்(noob) என்ற வார்த்தையை பயன்படுத்தினார். விளையாட்டில் புதிய அல்லது திறமை இல்லாத ஒருவரை குறிக்கும் வார்த்தையை பிரதமர் எதிர்க்கட்சியினரை பார்த்து குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலின் போது நான் இந்த வார்த்தையை (நூப்) பயன்படுத்தினால், நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று மக்கள் ஆச்சரியப்படுவார்கள். நான் இதைச் சொன்னால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட நபரைப் பற்றி நினைப்பீர்கள்," என்று பிரதமர் மோடி கூறினார்.
கேமிங் துறையின் எதிர்காலம் மற்றும் அவர்களின் வளர்ச்சிக்கு அரசாங்கம் எவ்வாறு உதவலாம் என்பது குறித்தும் பிரதமர் மோடி(PMO MODI) கேமர்களுடன் விவாதித்தார். இந்தியாவில் கேமர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் திறன் சார்ந்த விளையாட்டுகள் மற்றும் விரைவான வருமானம் அளிப்பவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடு குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார். கேமர்கள் இந்த வகையான கேம்கள் பற்றிய தெளிவை பரிந்துரைத்தனர் மற்றும் வீடியோ கேம் ஏற்படுத்தும் அடிமைத்தனம் பற்றியும் விவாதித்தனார்.
இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி இந்தியாவின் தலைசிறந்த கேமர்களான நமன் மாத்தூர் (மோர்டல்), அனிமேஷ் அகர்வால் (குண்டர்), அன்ஷு பிஷு (கேமர்ஃப்ளீட்), கணேஷ் கங்காதர் (SKrossi), தீர்த் மேத்தா (Gcttirth), பயல் தாரே (பயல் கேமிங்) மற்றும் மிதிலேஷ் படன்கர் (MythPat) ஆகியோருடன் உரையாடினார்.
இந்த உரையாடலின் போது கேமர்கள் பிரதமர் மோடிக்கு NAMO OP என்ற பெயரை வழங்கி கௌரவித்தனர். இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதராக இருப்பதால் பிரதமர் மோடிக்கு இந்த பெயரை வழங்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் போது கேமர்கள் பயன்படுத்தும் சில சொற்களையும் அவர்களிடமிருந்து பிரதமர் மோடி தெரிந்து கொண்டார். மேலும் கேமர்களுடன் இந்தியாவில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட வீடியோ கேம்களையும் விளையாடினார்.