OPINION POLLS| தேசத்தின் சிறந்த தலைவர் ராகுலா.? மோடியா.? வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்.!
2024 ஆம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல கட்டங்களாக நடைபெறுகிறது. இந்தப் பொதுத் தேர்தல் நடைபெறும் தேதிகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு பல்வேறு செய்தி நிறுவனங்களும் கருத்துக்கணிப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி நியூஸ் 18 சிஎன்என் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. இந்தக் கருத்து கணிப்பு இந்தியாவின் 21 மாநிலங்களில் 518 பாராளுமன்ற தொகுதிகளில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தக் கருத்துக்கணிப்பிலும் பாரதிய ஜனதா கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்ற முடிவு வெளியாகி இருக்கிறது.
மேலும் சிறந்த தலைவர் ராகுல் காந்தியா இல்லை நரேந்திர மோடி என்ற தலைப்பிலும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. 5 காரணங்களை அடிப்படையாக வைத்து இந்த கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. நேர்மையானவர் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வை உடைய தலைவர் வலிமையான தலைவர் மற்றும் கடின உழைப்பாளி என்ற ஐந்து தலைப்புகளின் கீழ் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது.
இவற்றில் 73% மக்கள் பிரதமர் மோடியை நேர்மையானவர் என தெரிவித்துள்ளனர். கடின உழைப்பாளி என்ற தலைப்பின் கீழ் மோடி 69 சதவீதம் வாக்குகளை பெற்று இருக்கிறார். வலிமையான தலைவராக 67% வாக்குகளும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராக 68 சதவீத வாக்குகளும் பெற்று இருக்கிறார். மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி என 71% மக்கள் வாக்களித்துள்ளனர்.
மறுபுறம் ராகுல் காந்தி பெற்ற வாக்குகளை பார்க்கும் போது நேர்மையான தலைவராக ராகுல் காந்திக்கு 27 சதவீதம் பேரு தான் வாக்களித்துள்ளனர் . ராகுல் காந்தி கடின உழைப்பாளி என 31 சதவீதம் பேரும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் என 32 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். ராகுல் காந்தி வலிமையான தலைவர் என 33 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மக்கள் நலனில் அக்கறை கொண்ட தலைவராக 29 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பெற்ற வாக்குகளை ஒப்பிட்டு பார்க்கும்போது எந்த ஒரு காரணியிலும் ராகுல் காந்தி 50 சதவீதம் வாக்குகள் கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவில் நேர்மையான மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக மக்கள் பிரதமர் மோடியை தேர்வு செய்துள்ளனர். எனினும் இந்த கருத்துக் கணிப்பு தேசியக் குடியுரிமை சட்டம் அமல்படுத்துவதற்கு முன்பு எடுக்கப்பட்டது. அதன் பிறகு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டிருந்தால் முடிவுகள் வேறு மாதிரி இருந்திருக்கலாம்.