யார் அந்த Sir..? பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர் கோஷம்..!! - கூண்டோடு வெளியேற்றிய சபாநாயகர்
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து நான்காவது ஆண்டாக இன்று தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை இடம்பெறுவது வழக்கம். அவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய உரையை வாசிக்காமலேயே வெளியேறிச் சென்றார். ஆளுநருக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவையில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளி நடப்பு செய்தது.
அதே வேளையில், "யார் அந்த சார்?" என்று அச்சிடப்பட்ட பேட்ஜ் அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு வந்துள்ளனர். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் "யார் அந்த சார்?" என்று அச்சிடப்பட்ட பேட்ஜை அணிந்து வந்துள்ளனர். மாணவி வன்கொடுமை விவகாரத்தைக் கையில் எடுத்து யார் அந்த சார் என கோஷம் எழுப்பியதால் அவையில் இருந்து அதிமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Read more ; பரபரப்பு.. சட்டப்பேரவையில் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டார்..!! ஆரம்பமே இப்படியா..