"யார் அந்த ஆதவ் அர்ஜுனா" - அமைச்சர் சேகர் பாபு பதில்…
சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் றேய தினம் ‘எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விசிக தலைவர் திருமாவளவன் இந்த நிகழச்சியை புறக்கணித்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நீதிபதி சந்துரு, விகடன் குழும நிர்வாகிகள், விசிக துணைப் பொதுச் செயலாளரும், நூலை உருவாக்கியவருமான ஆதவ் அர்ஜுனா, அம்பேத்கரின் பேரனான ஆனந்த் டெல்டுண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூலை விஜய் வெளியிட முதல் பிரதியை அம்பேத்கர் பேரனும் சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டூம்டே பெற்றுக் கொண்டார். 2-வது பிரதியை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொண்டார். 3-வது பிரதியை ஆதவ் அர்ஜுனாவும், 4-வது பிரதியை விகடன் குழும தலைவர் சீனிவாசனும் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய விசிக துணைப் பொதுச் செயலாளரும், நூலை உருவாக்கியவருமான ஆதவ் அர்ஜுனா, "“ தமிழகத்தில் மன்னராட்சியை அம்பேத்கரின் கொள்கைகள் உடைக்கும். 2026 தேர்தலில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும். பிறப்பால் முதலமைச்சராக ஒருவர் உருவாக்கப்பட கூடாது. தமிழகத்தை கருத்தியல் தலைவர் தான் ஆள வேண்டும்.
நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்கவில்லை என்றாலும் அவரின் மனசாட்சி இங்கு தான் இருக்கிறது. தமிழகத்தில் அம்பேத்கரின் கனவை நிறைவேற்றியவர் அம்பேத்கர் தான். கால சூழ்நிலைகள் பட்டியலின மக்களின் விலங்குகளை உடைக்கும் நேரம் வரும். தமிழகத்தில் இனி மன்னராட்சிக்கு இடமில்லை. தமிழகத்தில் மதம், சாதியை சேர்த்து ஊழலையும் ஒழிக்க வேண்டும்” என்று பேசினார்.
தமிழகத்தில் மன்னராட்சி நடந்து வருவதாக விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர் கேள்விகேட்டபோது, "ஆதவ் அர்ஜுனா யாரென்று எனக்கு தெரியாது, தெரிஞ்ச ஆள் யாரவது, ஏதாவது பேசினால் பதில் சொல்லலாம், எனக்கு தெரியாத ஆள் கேக்கின்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை எனக்கு இல்லை" என்று அமைச்சர் சேகர் பாபு பதில் கூறினார்.
Read More: ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்திற்கு கட்சி பொறுப்பல்ல…! கை விரித்த விசிக தலைவர் திருமாவளவன்…!