For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

யாருக்கெல்லாம் மத்திய அமைச்சர் பதவி..? சந்திரபாபு நாயுடு கட்சிக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு..? வெளியான லிஸ்ட்..!!

Chandrababu Naidu's Telugu Desam Party will get 4, Nitish 2 and Pawan Kalyan's Janasena Party will get one ministerial post.
10:37 AM Jun 09, 2024 IST | Chella
யாருக்கெல்லாம் மத்திய அமைச்சர் பதவி    சந்திரபாபு நாயுடு கட்சிக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு    வெளியான லிஸ்ட்
Advertisement

பிரதமர் மோடி இன்று 3-வது முறையாக இந்திய நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். அதோடு இன்று முதல் கட்ட அமைச்சரவை பதவி ஏற்பும் நடக்கிறது. இன்றைய தினம் 30 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு 18 அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட உள்ளன. முழு அமைச்சர்களின் பலம் 78 முதல் 81 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இன்று இரவு 7.15 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் நரேந்திர மோடி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இன்று நாடு முழுக்க அனைவரின் பார்வையும் மோடியின் அமைச்சரவை ஒதுக்கீட்டில் உள்ளது. பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு உள்துறை, பாதுகாப்பு, நிதி மற்றும் வெளிவிவகாரம் ஆகிய முக்கியமான இலாகாக்களை வைத்திருப்பவர்கள் உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சர்கள் ஆக போகும் எம்பிக்கள் பதவி ஏற்பார்கள்.

மேலும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 4, நிதிஷ்க்கு 2, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அமைச்சராக வாய்ப்புள்ளவர்கள் பட்டியல்:

பீகார் மாநிலம்

லாலன் சிங் - JD (U)

சிராக் பாஸ்வான்- எல்ஜேபி

சஞ்சய் குமார் ஜா- ஜேடி(யு)

ராம் நாத் தாக்கூர் - ஜே.டி.

சுனில் குமார் - (ஜேடி(யு)-குஷ்வாஹா சமூகம்)

கௌசலேந்திர குமார் - ஜே.டி.

ஜிதன் ராம் மஞ்சி - ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவர்

ராஜ்நாத் சிங் - பாஜக

ஜிதின் பிரசாத் - பாஜக

நித்யானந்த் ராய் - பாஜக

ராஜீவ் பிரதாப் ரூடி - பாஜக

சஞ்சய் ஜெய்ஸ்வால் - பாஜக

கர்நாடக மாநிலம்:

எச்.டி.குமாரசாமி - ஜனதா தளம்

பிரகலாத் ஜோஷி - பாஜக

பசவராஜ் பொம்மை - பாஜக

கோவிந்த் கர்ஜோல் (தலித்) - பாஜக

பிசி மோகன் (ஓபிசி) - பாஜக

தெலுங்கானா மாநிலம்

கிஷன் ரெட்டி - பாஜக

ஈட்டால ராஜேந்தர் - பாஜக

டி.கே.அருணா - பாஜக

டி அரவிந்த் - பாஜக

பாண்டி சஞ்சய் - பாஜக

மகாராஷ்டிரா மாநிலம்

அனுப்ரியா படேல் - அப்னா தளம் கட்சியின் தலைவர்

ஜெயந்த் சவுத்ரி - ராஷ்டிரிய லோக்தளம் தலைவர்

பிரதாப்ராவ் ஜாதவ் - பாஜக

நிதின் கட்கரி - பாஜக

பியூஷ் கோயல் - பாஜக

மத்திய பிரதேச மாநிலம்

ஜோதிராதித்ய சிந்தியா - பாஜக

சிவராஜ் சிங் சவுகான் - பாஜக

ஒடிசா மாநிலம்

தர்மேந்திர பிரதான் - பாஜக

மன்மோகன் சமல் - பாஜக

ராஜஸ்தான் மாநிலம்

கஜேந்திர சிங் ஷெகாவத் - பாஜக

துஷ்யந்த் சிங் - பாஜக

கேரளா மாநிலம்

சுரேஷ் கோபி - பாஜக

மேற்கு வங்காள மாநிலம்

சாந்தனு தாக்கூர் - பாஜக

Read More : ‘கல்யாணமே வேண்டாம்னு அடம்பிடித்த பிரேம்ஜிக்கு இன்று திருமணம்’..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

Tags :
Advertisement