For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரயில்வேத்துறை யாருக்கு…! நிதியமைச்சர் யார்…! முழு விவரம்..!

PM Modi's team has 30 Cabinet ministers, five Ministers of State with Independent charge and 36 Ministers of State. While some ministers like Rajnath Singh, S Jaishankar, Nitin Gadkari and others have retained their portfolios, there are some new entries in the Cabinet list.
07:53 PM Jun 10, 2024 IST | Kathir
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரயில்வேத்துறை யாருக்கு…  நிதியமைச்சர் யார்…  முழு விவரம்
Advertisement

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 72 பேர் மத்திய அமைச்சர்கள் இணை அமைச்சர்களாக நேற்று பொறுப்பேற்றனர். இந்த நிலையில் புதிய அமைச்சரவையில் உள்ளவர்களுக்கு எந்த பொறுப்பு என்பது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு அதே நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அது போல் கடந்த அமைச்சரவையில் வெளியுறவுத்துறை ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா ஆகியோருக்கு அதே பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

நிதிஷ் குமார் அல்லது சந்திரபாபு நாயுடு ஆகியோர்களின் கட்சிகளின் ஒருவருக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட ரயில்வேத்துறையை கடந்த முறை அமைச்சராக இருந்த அஷ்விணி வைஷ்ணவ்க்கே ஒதுக்கப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நிதின் கட்கரிக்கு சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அஜய் தம்தா மற்றும் ஹல்ஷ் மல்ஹோத்ரா ஆகியோர், நிதின் கட்கரிக்கு இணையமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ராம் மோகன் நாயுடு சிவில் விமான போக்குவரத்துறை அமைச்சராகவும், அன்னபூர்ணா தேவி பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சராகவும், சிவராஜ் சிங் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சராகவும், ஜோதிராதித்ய சிந்தியா டெலிகாம் துறையும், ஹெச்டி குமாரசாமி கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள், ஸ்டீல் துறை அமைச்சராகவும், சிராக் பாஸ்வான் உணவு பதப்படுத்தும் தொழில்களைத்துறை அமைச்சராகவும், புதிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக கிரண் ரிஜிஜுவும், ஹர்தீப் சிங் பூரிக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறையும், பூபேந்தர் யாதவ் சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய துறைகளிலும் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement