தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் பெற்ற பாஜக வேட்பாளர்கள் யார்..? அட இவரு தான் டாப்..!!
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பாஜக 19 இடங்களில் போட்டியிட்ட நிலையில், அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது. அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் தோல்வியை தழுவினார். இந்நிலையில், தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நாடு முழுவதும் நடந்து முடிந்த 18-வது மக்களவை தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி தனித்தும் என 4 முனைப் போட்டி நிலவியது. திமுக தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில், திமுக 21, காங்கிரஸ் 9, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2, மதிமுக 1, விசிக 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1 இடங்களில் போட்டியிட்டன.
அதிமுக கூட்டணியில், அதிமுக 32, தேமுதிக 5, புதிய தமிழகம் கட்சி 1, எஸ்.டி.பி.ஐ. கட்சி 1 இடங்களில் போட்டியிட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 19, பாமக 10, தமிழ் மாநில காங்கிரஸ் 3, அமமுக 2, இந்திய ஜனநாயக கட்சி 1, புதிய நீதிக்கட்சி 1, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் 1, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1, ஓபிஎஸ் 1 இடம் என போட்டியிட்டன. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி அள்ளியது. பல நட்சத்திர வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். கோவை தொகுதியில் அண்ணாமலை தோல்வியை தழுவினார். பாஜக போட்டியிட்ட 24 இடங்களிலும் தோல்வியை தழுவியது. எனினும் 10 இடங்களில் இரண்டாம் இடம் பிடித்தது.
பாஜக வேட்பாளர்களில் அதிக வாக்குகள் வாங்கியது என்று பார்த்தால் அண்ணாமலைதான். கோவை தொகுதியில் இரண்டாம் இடம் பிடித்த அண்ணாமலை 4,50,132 வாக்குகள் வாங்கியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் 3,66,341 வாங்கியுள்ளார்.
பாஜக வேட்பாளர்கள் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை...
- அண்ணாமலை (கோவை) - 4,50,132
- நயினார் நாகேந்திரன் (நெல்லை) - 3,36,676
- தமிழிசை (தென் சென்னை) - 2,90,683
- எல் முருகன் (நீலகிரி) - 2,32,627
- பாலகணபதி (திருவள்ளூர்) - 2,24,801
- வசந்த ராஜன் (பொள்ளாச்சி) - 2,23,354
- நரசிம்மன் (கிருஷ்ணகிரி) - 2,14,125
- ராமசீனிவாசன் (மதுரை) - 2,20,914
- ஏபி முருகானந்தம்(திருப்பூர்) - 1,85,322
- கருப்பு முருகானந்தம் (தஞ்சாவூர்) - 1,70,613
- மனோஜ் பி செல்வம் (மத்திய சென்னை) - 1,69,159
- கார்த்தியாயினி (சிதம்பரம்) - 1,68,493
- ராதிகா சரத்குமார் (விருதுநகர்) - 1,64,149
- அவஸ்தாமன் (திருவண்ணாமலை) -1,56,650
- பால் கனகராஜ் (வட சென்னை)- 1,13,318
- விவி செந்தில் நாதன்(கரூர்) - 1,02,482
- கேபி ராமலிங்கம் (நாமக்கல்) - 1,04,690
- எஸ் ஜி எம் ரமேஷ் (நாகை)- 1,02,173
Read More : பவன் கல்யாண் முதல் கங்கனா ரனாவத் வரை!… தேர்தல் களத்தில் வெற்றி வாகை சூடிய சினிமா நட்சத்திரங்கள்!