முதல் முறையாக குரங்கம்மை சோதனை கருவிக்கு ஒப்புதல் அளித்த WHO… அது எப்படி வேலை செய்யும் தெரியுமா?
Mpox வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு (WHO) முதல் முறையாக குரங்கம்மை (mpox) சோதனை கருவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. Abbott Molecular Inc. நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த கருவி Alinity m MPXV மதிப்பீடு என்று அழைக்கப்படுகிறது. .
இந்த கருவியின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு(WHO) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குரங்கு அம்மை பாதிப்பால் போராடும் நாடுகளில் வைரஸை கண்டறியும் திறனை இந்த கருவி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபர்களின் புண்களில் இருந்து எடுக்கப்படும் மாதிரிகளில் இருந்து கிளேட் I மற்றும் II ஆகிய இரண்டு mpox வைரஸ் மாறுபாடுகளை கண்டறிய இந்த கருவி உதவுகிறது. மேலும் இந்த கருவி IVD மற்றும் PCR சோதனைகளில் திறமையான பயிற்சி பெற்ற ஆய்வக பணியாளர்களால் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.
சொறி மாதிரிகளில் இருந்து டிஎன்ஏவைக் கண்டறிவதன் மூலம், சுகாதாரப் பணியாளர்கள் mpox பாதிப்புகளை திறம்பட உறுதிப்படுத்த இந்த கருவி உதவும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த கருவியை எவ்வாறு பயன்படுத்துவது?
இந்த கருவி சோதனைகள், தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை போன்ற உயிர்காக்கும் மருந்து அத்தியாவசியங்கள் கிடைப்பதை செயல்முறை துரிதப்படுத்துகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், WHO, mpox சோதனை கருவி உற்பத்தி நிறுவனங்களுக்கு தங்கள் கருவி தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அழைப்பு விடுத்தது. தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த உலகளாவிய சோதனை திறன்களை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை WHO அங்கீகரித்துள்ளது.
Mpox அல்லது குரங்கு அம்மை என்பது ஒரு நோய்த்தொற்று ஆகும். இது ஆபத்தான நோய் என்பதால் முன்கூட்டியே வைரஸ் கண்டறிவது அவசியம். ஆப்பிரிக்காவில் mpox பாதிப்புகளை உறுதி செய்வதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படும் நிலையில், அதற்கு மிகவும் குறைவான சோதனை திறன்களே காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.
2024 இல், புருண்டி, காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் நைஜீரியாவில் 30000 சந்தேகத்திற்கிடமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. காங்கோவில், சந்தேகத்திற்குரிய பாதிப்பில் 37% மட்டுமே பதிவாகியுள்ளன.
புற்று நோயை உண்டாக்கும் நான்ஸ்டிக் பாத்திரங்கள்..!! – நிபுணர்கள் எச்சரிக்கை
சிறுநீரக கல் பிரச்சனைக்கு சூப்பர் தீர்வு..!! இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க போதும்..!!
கள்ளக்காதலியுடன் லாங் டிரைவ்.. கையும் களவுமாக பிடித்த மனைவி மீது தாக்குதல்..!! – வைரலாகும் வீடியோ