திருப்பதி லட்டு தயாரிக்க ஆவின் நெய் விநியோகம்.. தேவஸ்தானத்துடன் டீல் பேசும் ஆவின்..!!
திருப்பதி லட்டு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திருப்பதி லட்டுகளை தயாரிக்க ஆவின் நெய் விநியோகம் செய்வது குறித்து முடிவு எடுக்கவுள்ளதாக ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, ஆவின் அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் புகழ்பெற்ற திருத்தலங்கலான திருவண்ணாமலை, பழனி உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்கு ஆவின் நிறுவனத்தின் மூலமாகவே நெய் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
திருப்பதியில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரை லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கான உயர்தரமான, சுவையுடைய நெய்யை ஆவின் நிறுவனமே விநியோகம் செய்து வந்தது. ஆனால், 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நெய் மிகவும் குறைந்த விலைக்கு கேட்கப்பட்டதால் ஆவின் நிறுவனம் சார்பில் நெய் விநியோகம் நிறுத்தப்பட்டது.
ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் உயா்தர நெய்யை திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க விநியோகம் செய்வதற்கு தயாராக உள்ளது. நெய்யிற்கான உரிய விலை அளித்து வாங்க திருப்பதி தேவஸ்தானம் ஒப்புக் கொண்டால், ஆவின் சார்பில் மீண்டும் நெய் விநியோகம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
Read more ; அண்ணாமலை பாணியில் அடுத்த அடியை எடுத்து வைக்கும் விஜய்.. ஊழல் பட்டியல் ரெடி? திமுக அதிமுக-வுக்கு செக்!!