முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கனமழை எச்சரிக்கை : மழை அப்டேட்களை உடனே பெற செல்போன் செயலி அறிமுகம்..!!

While the India Meteorological Department has warned that there is a possibility of heavy rain in Tamil Nadu, Deputy Chief Minister Udhayanidhi has released a new mobile application on behalf of the Tamil Nadu government to know rain-related news.
03:36 PM Oct 13, 2024 IST | Mari Thangam
Advertisement

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த 2 தினங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் அடுத்து வரும் சில நாட்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட 13,000 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். தாழ்வான மின்மாற்றிகள் அதிக உயரத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பருவமழைக்காலத்தில் எச்சரிக்கைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ‘தமிழ்நாடு அலர்ட்’ என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது‌. 1913 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். கட்டுப்பாட்டு மையத்தில் சுமார் 150 பேர் 4 ஷிப்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். வாட்ஸ் ஆப், சமூக வலைதளங்கள் வாயிலாக மழை தொடர்பான தகவல்கள் பகிரப்படும். மேலும் 13 ஆயிரம் தன்னார்வலர்கள் பணிகளில் ஈடுபடுகின்றனர். சென்னையின் அனைத்து வார்டுகளிலும் நிவாரண மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும் மழை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய  தமிழ்நாடு அலர்ட் (Tamilnadu Alert) என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

Read more ; 4 நாட்கள் தீபாவளி விடுமுறை? முதலமைச்சருக்கு பறந்த கடிதம்.. கருணை காட்டுமா தமிழக அரசு?

Tags :
Heavy rainIndia Meteorological DepartmentMobile Apptn governmentudhayanidhi
Advertisement
Next Article