For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திருந்தவே மாட்டிங்களா? கள்ளக்குறிச்சியில் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய விற்பனை..!! அதிரடி காட்டிய போலீஸ்..

While the incident of death due to drinking liquor in Kallakurichi shook Tamil Nadu, the sale of liquor again has caused a shock.
07:05 PM Oct 14, 2024 IST | Mari Thangam
திருந்தவே மாட்டிங்களா   கள்ளக்குறிச்சியில் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய விற்பனை     அதிரடி காட்டிய போலீஸ்
Advertisement

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், தற்போது மீண்டும் கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்ததில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் கள்ளச்சாரயத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதியின் உத்தவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் ஏழுமலை, உதவி ஆய்வாளர் மணிபாரதி ஆகியோர் தலைமையில் தும்பராம்பட்டு மற்றும் வெள்ளரிக்காடு ஆகிய கிராமங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாரி டியூப், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் 60 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 100 லிட்டர் ஆகியவற்றை கண்டுபிடித்த போலீசார், கைப்பற்றிய சாராய ஊரலை சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தும்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தசின்னையன் (58) மற்றும் வெள்ளரிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை(27) ஆகிய இருவரையும் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னதாக கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

Read more ; கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த விஜய் டிவி புகழின் மகள்.. எதற்காக தெரியுமா?

Tags :
Advertisement