For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற தலைப்பில் கொள்கை பாடல் வெளியீடு..!!

While the flag song of the Tamil Nadu Vetri Kazhagam was released, the principle song was released starting with “Vetri…Vetri…”
04:48 PM Oct 27, 2024 IST | Mari Thangam
 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்  என்ற தலைப்பில் கொள்கை பாடல் வெளியீடு
Advertisement

தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்தே இன்று அதிகாலை முதலே விக்கிரவாண்டிக்கு தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் காலை 11 மணியளவிலேயே மாநாட்டுத் திடலில் இருந்த பார்க்கிங் வசதி நிரம்பியது. இருப்பினும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் வந்த வண்ணமே உள்ளனர்.

Advertisement

வி.சாலை பகுதிகளில் உள்ள அனைத்து உணவகங்களிலும் காலையிலேயே உணவு தீர்ந்துவிட்டதால், அப்பகுதியில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது போன்ற பல்வேறு நடைமுறைச் சிக்கல்களையும் கருத்தில் கொண்டு மாலை 6 மணிக்கு மாநாடு தொடங்கவிருந்த நிலையில் மாநாட்டை பகல் 3 மணிக்கே தொடங்கியது.

த.வெ.க. தலைவர் விஜய் மாநாட்டு திடலுக்கு வருகை தந்தார். த.வெ.க. தலைவர் விஜய்யை பார்த்ததும், மாநாட்டு திடலில் கூடியிருந்த தொண்டர்கள், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அதனைத்தொடர்ந்து 100 அடி உயர கம்பத்தில் தவெக கொடி ஏற்றப்பட்டது. ஆரவாரமுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தவெக தலைவர்கள் விஜய் உட்பட அனைத்து தொண்டர்களும் எழுந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். பின்னர் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிப்பாடல் வெளியிடப்பட்ட நிலையில், “வெற்றி… வெற்றி…” எனத் தொடங்கும் கொள்கைப்பாடல் வெளியிடப்பட்டது. மதசாப்பற்ற சமூகநீதி கொள்கை வழியில் 5 தலைவர்களை கொண்டு தவெக பாடல் உறுவாக்கப்பட்டுள்ளது. மேலும் விஜயின் தோளை பிடித்து பெரியார் வழிநடத்துவதை போல கிராப்பிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

தவெக கொள்கைப்பாடலில் ‘சாதி,மத,பாலின பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாய மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையோடு, Secular Social Justice Ideologies ஓட தமிழக வெற்றி கழகத்தின் வழியாக உங்களுக்காக உழைக்க நான் வரேன்..’ என விஜயின் குரல் இடம்பெற்றுள்ளது.

Read more ; தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது தவெக மாநாடு..!!

Tags :
Advertisement