விடாமல் துரத்தும் சிபிசிஐடி.. ஓடி ஒளியும் எம்.ஆர் விஜயபாஸ்கர்.. சிக்கிய முக்கிய புள்ளி!! அடுத்து நடக்கப் போவது என்ன?
100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்துவிட்டார் என்று கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற தொழிலதிபர் சமீபத்தில் கரூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். இதனை தொடர்ந்து போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மீதும், தன்னை மிரட்டியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் மாவட்டம் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். இந்த புகாரின் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் தன்னையும் குற்றவாளியாக சேர்க்கப்படலாம் என நினைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீதிமன்றத்திலும் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து விஜயபாஸ்கர் தலைமறைவானர். சிபிசிஐடி போலீசார் பல இடங்களிலும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அவரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒரு பக்கம் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சென்னை மற்றும் கரூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகங்கள் , அவரது ஆதரவாளர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தி நிறைய ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கிறது சி.பி.சி.ஐ.டி. இதில், போலீசார் எதிர்பார்க்காத வேறு விவகாரங்கள் குறித்த டாகுமெண்ட்டுகளும் கிடைத்துள்ளதாம்.
சி.பி.சி.ஐ.டி.க்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுகவின் போக்குவரத்து தொழிற்சங்கத்தின் தென்சென்னை மண்டல செயலாளராக இருக்கும் ரவிச்சந்திரன் தான், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எல்லாமுமாக இருந்து வந்தாராம். அவருக்கு சொந்தமான ஓரிடத்தில் தான் விஜயபாஸ்கர் தலைமறைவாக ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று அந்த ரகசிய தகவல் சொல்கிறதாம். அந்த தகவலை புறந்தள்ளி விடாமல், ரகசியமாக விசாரித்து வருகிறதாம் சி.பி.சி.ஐ.டி. அதனால், விரைவில் விஜயபாஸ்கரை அரஸ்ட் செய்து விடுவார்கள் என்று அதிமுக வட்டாரங்களில் விவாதிக்கப்படுகிறது.