Happy Diwali 2024 : ஆனந்தம் பொங்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!! வாழ்த்தின் முக்கியத்துவம் இதோ..
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் மக்கள், தங்களின் இல்லங்களை அலங்கரித்தும், தீபங்களை ஏற்றி வைத்தும், புத்தாடைகளை அணிந்தும், உற்றார் உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்து உண்டும், உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.
இந்த கொண்டாட்டத்தின்போது மக்கள் ஒருவருக்கொருவர் அன்பான வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம். "வாழ்த்து" இந்த வார்த்தை பல மொழிகளில், பல கோணங்களில், பல நாடுகளில் காலம் காலமாகப் புழக்கத்தில் இருந்து வருகிறது. கிறிஸ்து பிறப்பிற்கு முன்பு இருந்தே ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லிக்கொள்ளும் கலாச்சாரம் இருந்ததாகப் பல வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடுகின்றன.
இந்த வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், உறவுகளில் நெருக்கம் ஏற்படுவதுடன், மனக் கசப்புகள் விலகும், நீண்ட நாள் பேசாமல் இருந்தவர்கள் கூட இந்த பண்டிகையைச் சாக்காக வைத்து வாழ்த்து தெரிவித்து உறவைப் புதுப்பித்துக்கொள்வார்கள்.
வரும் தலைமுறைக்கு அந்த வாழ்த்தின் ஆர்த்தமும், முக்கியத்துவமும் பாரம்பரிய கலாச்சாரத்தை எடுத்துரைக்கும். அந்த வகையில் ஆண்டுதோறும் தீபாவளி வாழ்த்துக் கவிதைகளை மக்கள் தங்களுக்குத் தெரிந்தார் போல் எழுதி பரிமாறிக்கொள்வது வழக்கமாக இருக்கும் நிலையில், உங்கள் மனதில் இருக்கும் வாழ்த்துக்களை வார்த்தைகளாகக் கோர்த்து இருக்கிறோம்.
வாழ்த்து 1 : இந்த தீபாவளி திருநாளில் தீமைகள், வெறுப்பு உணர்வு நீங்கி நன்மைகள் சேர்க்கும் திருநாளாகும். திருவிழாவின் உணர்வைக் கொண்டாட அனைவரும் ஒன்று சேருவோம். இனிய தீபாவளி வாழ்த்துகள்!
வாழ்த்து 2 : பட்டாசுகள், இனிப்புகள் மற்றும் இதயம் நிறைந்த மகிழ்ச்சி. உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.
வாழ்த்து 3 : இந்த தீப ஒளி முடிவில்லாத மகிழ்ச்சி, செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் செல்வத்துடன் உங்கள் வாழ்க்கையை எப்போதும் ஒளிரச் செய்யட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துக்கள்!
வாழ்த்து 4 : தீபாவளி திருநாளில் உங்கள் வீடு மகிழ்ச்சியுடன் நிரம்பட்டும். எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சி உடன் இருங்கள்.
வாழ்த்து 5 : இன்றோடும் துன்பங்கள் நீங்கி என்றும் இன்பங்கள் மலரும் தீப ஒளியாக இந்த தீபாவளி அமையட்டும் இனிய தீபாவளி வாழ்த்துகள்
Read more ; B.Com முடித்த நபர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு… தமிழக அரசு அறிவிப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்