முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Indian 2 | இந்தியன் 2 படத்திற்கு வந்த சிக்கல்!! இந்த 5 விஷயத்தையும் உடனே மாத்துங்க.. சென்சார் போர்டு போட்ட கண்டிஷன்!

While Indian 2, the most awaited film by Kamal's fans, is slated to release on the 12th, it seems that the censor board has ordered the film crew to make 5 major changes in the film.
01:55 PM Jul 07, 2024 IST | Mari Thangam
Advertisement

கமலின் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான இந்தியன் 2, வரும் 12ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தில் 5 முக்கிய மாற்றம் செய்ய வேண்டும் என தணிக்கை குழு படக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 28 ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் 'இந்தியன்'. இந்த திரைப்படம் ரசிகர்களின் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல் ஹாசன் அப்பா தந்தை என இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இதில் அப்பா கமலுக்கு நடிகை சுகன்யாவும் மகன் கமலுக்கு மனிஷா கொய்ராலாவும் நாயகியாக நடித்துள்ளனர். மேலும் கவுண்டமணி செந்தில் நாசர் என பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் 1996 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது கமல்ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூலை 12 ஆம் தேதி வெளியாகயுள்ளது. இந்த படத்திலும் கமல்ஹாசன் (Kamal Haasan) சேனாபதி எனும் தாத்தா கமல் பாத்திரத்திலேயே நடிக்கிறார். இதில் நடித்து வந்த நடிகர்கள் விவேக், மயில்சாமி, மனோபாலா, நெடுமுடி வேணு விட்ட போல படப்பிடிப்பின் பாதியிலேயே உயிரிழந்து விட்டனர். இதனாலும் பட வேலைகளில் தாமதம் ஏற்பட்டது. இதனுடன் இந்த படத்தில் சித்தார்த் (Siddharth), பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் (Rakul Preet Singh), காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, ஜெகன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பு இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. முதல் பாகத்தில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். ஆனால் அதன் இரண்டாம் பாகத்திற்கு அனிருத் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்தியன் 2 படத்தில் இருந்து மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளன. இந்த பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல ரீச் பெற்று வருகிறது. தற்போது எக்ஸ்க்ளுசிவாக படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 படத்தின் ரன்னிங் டைம் குறித்து சென்சார் போர்டு சான்றிதழ் வெளியாகி உள்ளது. அதில் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படத்தில் 5 விசயங்களை மாற்ற வேண்டும் என்றும் படக்குழுவிற்கு சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி படத்தில், புகைப்பிடித்தல் தொடர்பான எச்சரிக்கை வாசகங்களை கருப்பு நிறத்தில் மிகவும் பெரியதாக வெள்ளை நிற பின்னணியில் வைக்க வேண்டும், காட்சியில் வரும் ஊழல் சந்தை என்ற லேபிளை அகற்ற வேண்டும். குறைந்த ஆடைகள் கொண்ட அல்லது ஆடையில்லாது நடிகர்கள் தோன்றும் காட்சியில் மாற்றம் செய்ய வேண்டும். டர்ட்டி இந்தியன்' 'F**k' உள்ளிட்ட வசனங்களை நீக்க வேண்டும். படத்தில் வரும் காப்புரிமை பெற்ற விசயங்களுக்கு NOC - தடையின்மை சான்றிதழ் வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கி இருக்கிறது.

இந்தியன் 2 திரைப்படத்தை பார்த்துவிட்டு சென்சார் போர்டு நபர்கள் கமல் ஹாசனிடம் தங்களது கருதுவக்களை தெரிவிக்கும் பொழுது 'படம் நன்றாக இருகிறது' என தங்களத விமர்சனத்தை கூறினார்களாம். இதனை வெளிப்படையாக கமல் ஹாசன் கூறியுள்ளார். மேலும் சென்சார் போர்டை சேர்ந்தவர்கள் படம் நன்றாக இருக்கிறது என்று சொல்வது மிகவும் அரிது என்றும் இது போன்ற பல படங்களுக்கு அவர் சொல்ல வேண்டும் என கமல் ஹாசன் கூறினார்.

12 கெட்டப்பில் கமல்ஹாசன்:
இதனிடையே இந்த படத்தில் கமல்ஹாசன் மொத்தமாக 12 கெட்டப்களில் நடித்துள்ளாராம். அதில் இந்தியன் 2 படத்தில் 7 கெட்டப்களிலும், மூன்றாம் பாகத்தில் 5 கெட்டப்பிலும் தோற்றம் அளிக்கவுள்ளார். இதன் மூலம் தசாவதாரம் படத்தில் பத்து கெட்டப்களில் நடித்த சாதனையை முறியடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
censor boardindian 2kamal hasan
Advertisement
Next Article