தமிழகத்தில் இரண்டு பேருக்கு துணை முதல்வர் பதவி? ஒருத்தர் உதயநிதி.. இன்னொருத்தர் யாரு தெரியுமா?
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அதற்கு முன் இரண்டு பேருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட தி.மு.க., தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜன., 21ல், சேலத்தில், தி.மு.க., இளைஞரணி மாநில மாநாடு நடைபெற்றது. மாநாடு முடிந்ததும், அமைச்சர் உதயநிதிக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவானது. லோக்சபா தேர்தலுக்கு முன், துணை முதல்வர் பதவி வழங்கினால், சரியாக இருக்காது என மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். இதனால், ‘துணை முதல்வர் பதவி என்பது வதந்தி’ என்று, ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், விக்கிரவாண்டி இடைதேர்தல் முடிந்ததும், முதல்வர் ஸ்டாலின் இம்மாதம் இறுதியில் அமெரிக்காவிற்கு செல்ல உள்ளார். அங்கு, அதிக நாட்கள் தங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனால், முதல்வர் பணிகளை கவனிக்கும்விதமாக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.
ஸ்டாலின் வெளிநாடு செல்வதை முன்னிட்டு ஆட்சி நிர்வாக பொறுப்புகள் அவருக்கு முழுமையாக வழங்கப்படலாம் என்கிறார்கள். அதே சமயம் உதயநிதி மட்டுமின்றி ஆளும் திமுகவில் முதல்வர் ஸ்டாலினுக்கு துணையாக உதயநிதியோடு சேர்த்து மொத்தம் 2 பேருக்கு துணை முதல்வர் பதவி தரப்படலாம் என்ற தகவல் ஒன்று பரவ தொடங்கி உள்ளது. அமைச்சர் துரைமுருகன் போன்ற சீனியர் ஒருவருக்கும் கூடுதலாக துணை முதல்வர் பதவி தரப்படலாம், கட்சியில் இதன் மூலம் சீனியர்களை குஷிப்படுத்தலாம், பொது விமர்சனங்களையும் தவிர்க்கலாம், என்று ஸ்டாலின் நினைக்கிறாராம்.
Read more ; குறைந்த விலையில் பல அம்சங்களுடன் கூடிய iQoo Z9 Lite 5G மொபைல் அறிமுகம்..!!