பிரிஜ் பூஷன் சர்ச்சை பேச்சு.. பதிலடி கொடுத்த வினேஷ் போகத்..!! என்ன சொன்னார் தெரியுமா?
பிரிஜ் பூஷணுக்கு எதிரான, கடந்தாண்டு தொடங்கப்பட்ட மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், வீரா் பஜ்ரங் புனியா இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா். இருவரும் காங்கிரஸில் இணைந்தது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதுதான் என்று இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் குற்றம் சாட்டினார்.
மேலும், ஒரு மல்யுத்த வீரர் ஒரே நாளில் இரண்டு எடைப் பிரிவுகளில் சோதனை செய்ய முடியுமா என்று வினேஷ் போகத்தை கேட்க விரும்புகிறேன்.. ஏமாற்றி தான் அங்கு சென்றீர்கள். இன்னொரு வீராங்கனைக்கான வாய்ப்பை தட்டிப் பறித்து சென்றீர்கள். அதற்கான தண்டனையும் கடவுள் உங்களுக்கு வழங்கிவிட்டார்." என்று கூறியிருந்தார். இந்த கருத்து கடும் சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு தரப்பில் இருந்து பிரஜ் பூஷண் சரண் சிங்குக்கு கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா குறித்து எதுவும் பேச வேண்டாம் என்று பிரஜ் பூஷணுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், ஜூலானா பேரைவத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். அப்போது பிரிஜ் பூஷண் பேசியது குறித்து வினேஷ் போகத் கூறியுள்ளதாவது: பிரிஜ் பூஷண் கூறியதையெல்லாம் நினைத்துப் பாருங்கள். பெண்கள் தன் மீது குற்றம் சுமத்தினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வதாக கூறியிருந்தார். ஆனால், பல பெண்கள் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். நான் ஏமாற்றிதான் ஒலிம்பிக் சென்றதாகக் கூறுகிறார்.
நான் தேசிய அளவிலான போட்டிகளில் போட்டியிட விரும்பவில்லை. இருப்பினும், தேசிய அளவிலும் பல்வேறு சோதனைப் போட்டிகளிலும் போட்டியிட்டுதான் ஒலிம்பிக் போட்டிக்குச் சென்றேன். என் தகுதியையும் திறமையையும் வைத்துதான் சென்றேன். எங்களுக்கான வாய்ப்பு வரும்போதெல்லாம் பிரிஜ் பூஷண் தவறானவர் என்பதை அம்பலப்படுத்துவோம் என்றார்.
Read more ; ‘ஆர்த்தியை பிரிகிறேன்..!!’ விவாகரத்து முடிவை அறிவித்த நடிகர் ஜெயம் ரவி – ரசிகர்கள் ஷாக்