For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மலையாள சொந்தங்களே.. தவெக தலைவர் விஜய் ஒணம் வாழ்த்து..!! விநாயகர் சதுர்த்தி வாழ்த்து எங்கே? - வெடித்தது புது சர்ச்சை..

While actor Vijay wished on Bakrit and Onam, did not wish on Vinayagar Chaturthi. Due to this, DMK's ``B Tema'' has started a new controversy.
10:42 AM Sep 15, 2024 IST | Mari Thangam
மலையாள சொந்தங்களே   தவெக தலைவர் விஜய் ஒணம் வாழ்த்து     விநாயகர் சதுர்த்தி வாழ்த்து எங்கே     வெடித்தது புது சர்ச்சை
Advertisement

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். செப்டம்பர் 23ம் தேதி முதல் அரசியல் மாநாட்டை நடத்துகிறார். இந்நிலையில் தான் நடிகர் விஜய் பக்ரீத் பண்டிகை மற்றும் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதனால் திமுகவின் ‛பி டீமா’ தவெக என்ற புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது.

Advertisement

கேரளாவில் இன்று ஒணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் பல இடங்களில் விநாயகர் சதுர்த்தி பண்டிக நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வீடுகளில் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வைத்தும், விநாயகர் போட்டோவுக்கும் பூஜைகள் செய்து வழிபட்டனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், பல பிரபலங்கள் வாழ்த்துதெரிவித்தனர். ஆனால் தவெக விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் கேரள மக்களுக்கு ஒணம் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

நடிகர் விஜய் திரைத்துறையில் இருந்து அரசியலுக்குள் நுழைந்துள்ளார். கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார். அதன்பிறகு நிர்வாகிகள் நியமனம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். செப்டம்பர் 23ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்துகிறார். இதற்கான பணியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் தான் ஒணம் பண்டிகைக்கு விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை கொண்டாடினர். இதற்காக கடந்த ஜூன் மாதம் 17 ம் தேதி நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில்,‛‛ அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இசுலாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.'' என கூறியிருந்தார்.

இந்நிலையில் தான் பக்ரீத் மற்றும் ஒணம் பண்டிகை-க்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று சர்ச்சை கிளம்பி உள்ளது. விஜயின் இந்த நடவடிக்கையை பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் தற்போது விமர்சிக்க தொடங்கி உள்ளனர். பொதுவாக தமிழகத்தில் இந்து பண்டிகைகளுக்கு திமுக சார்பிலும், திமுக தலைவர்கள் சார்பிலும் வாழ்த்து என்பது தெரிவிக்கப்படாது. மாறாக இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் பண்டிகைக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த பாணியில் நடிகர் விஜயும் செயல்படுகிறார் என தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Read more ; பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான அடிப்படை விலை

Tags :
Advertisement