டெங்கு பாதிப்பை எந்த டெஸ்ட் எடுத்தால் உறுதி செய்ய முடியும்..? எந்த உணவுகளை சாப்பிட வேண்டும்..?
டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால், சுயமாக மருத்துவம் செய்யாமல், அருகில் உள்ள மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தேவையான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 4 வகையான டெங்கு வைரஸ்களில் ஒன்றான DENV எனப்படும் கொசுவின் கடியில் இருந்து டெங்கு பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது ஏடிஸ் எஜிப்டி கொசு மூலம் பரவுகிறது. டெங்கு ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது. இருப்பினும் கர்ப்பிணி மூலம் குழந்தைக்குப் பரவுகிறது. டெங்கு ஏற்பட்டால் அதற்கென எந்த பிரத்யேக சிகிச்சையும் கிடையாது. எனவே, சரியான நேரத்தில் பரிசோதனை செய்வது அவசியமாகிறது.
டெங்கு பாதிப்பின் அறிகுறிகள் :
காய்ச்சல், குறைந்த இரத்த தட்டுக்கள், குறைந்த ரத்த அழுத்தம், கண் வலி, தலைவலி, மூட்டு மற்றும் தசை வலி, குமட்டல் மற்றும் வாந்தி, சொறி, குளிர், நீர்க்கட்டிகள், வீக்கம், தாகம், வெளிர் மற்றும் குளிர்ந்த தோல், ஈறுகள் மற்றும் வாயில் இரத்தப்போக்கு, தோல் வெடிப்பு, சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை டெங்கு பாதிப்பின் அறிகுறிகள் ஆகும்.
டெங்கு பரிசோதனை எப்போது செய்ய வேண்டும்..?
அதிக காய்ச்சல், சொறி, மூட்டு வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டெங்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆன்டிபாடி சோதனைகள், IgM மற்றும் IgG, முழுமையான இரத்த எண்ணிக்கை மற்றும் அடிப்படை வளர்சிதை மாற்ற குழு ஆகிய சோதனைகள் மூலம் டெங்கு பாதிப்பை கண்டறியலாம். இதில் ஏதேனும் ஒன்றை செய்வதன் மூலம் டெங்கு பாதிப்பு உள்ளதா? இல்லையா? என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை :
சோதனைக்கு முன், நீரேற்றமாக இருப்பது அவசியம். நீர்ச்சத்து அதிகமாக இருந்தால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் துல்லியமான இரத்த மாதிரியை பெற முடியும். உங்கள் சோதனைகளுக்கு முன் வலி நிவாரணிகள் அல்லது அழற்சி எதிர்ப்பு மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.
டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன சாப்பிட வேண்டும்..?
பப்பாளி இலை சாறு, மாதுளை, இளநீர், ப்ரோக்கோலி, மூலிகை தேநீர் மற்றும் தயிர் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். காரமான மற்றும் எண்ணெய் உணவுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். சிட்ரஸ் பழங்கள், கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வேகவைத்த காய்கறிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். மது, புகைபிடித்தல், காஃபின், வறுத்த மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
டெங்குவைத் தடுக்க, கொசுக்கள் பெருகும் இடங்களை அகற்ற உங்கள் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். முழுக்கை ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். கொசுக் கடியைத் தவிர்க்க விரட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மாலை நேரத்தில் ஜன்னல்களை மூடி வைத்து, வீட்டின் அருகே தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.