பூஜை அறையில் வைக்க வேண்டிய சாமி படங்கள், வைக்கக்கூடாதா சாமி படங்கள் எவை..?
தினமும் காலையில் நாம் அந்நாளை துவங்கும் முன் கடவுளை வணங்கி விட்டு தான் நாம் துவங்குவோம். அப்படி இருக்க நம் அனைவருடைய வீட்டிலும் பூஜையறை இருக்கும். அந்த பூஜையறையில் இருக்க கூடாத சாமி படங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
விநாயகர், முருகன், சரஸ்வதி உள்ளிட்ட சாமி படங்களை வைத்து வணங்கலாம். ஆனால் சனீஸ்வர பகவானின் படங்கள் ஒருபோதும் வீட்டில் இருக்கக் கூடாது. அதேபோல் மொட்டை அல்லது கோவனம் கட்டிய படி உள்ள கடவுளின் படங்கள் வீட்டில் இருக்கக் கூடாது.
தலைவிரி கோலத்தில் உள்ள சாமியின் படங்கள் மற்றும் நடராஜரின் உருவப்படம் பூஜை அறையில் இருக்கக் கூடாது. உக்கிர தெய்வமான காளியின் படங்கள் பூஜை அறையில் இருக்கக் கூடாது. பூஜை அறையில் முருகன் படம் இருந்தால் நல்லது. ஆனால் வேல் தலைக்கு மேல் உள்ளவாறு இருக்கக் கூடாது. இவற்றில் மிகவும் முக்கியமானது வீட்டு பூஜை அறையில் உடைந்த சாமி சிலைகள் மற்றும் உடைந்த சாமி படங்கள் இருக்கவே கூடாது.