எந்த மாதத்தில் வீடு கட்டலாம்…! கட்டக்கூடாது…! வாஸ்து சாஸ்திரம் சொல்வதென்ன..!
வீட்டை கட்டி பார் கல்யாணத்தை பண்ணி பார் என்ற பழமொழி இருக்கிறது. இவை இரண்டும் சுலோபமான வேலை இல்லை. நீங்கள் வீடு கட்ட ஆரம்பித்து தள்ளாடுவதை விட அதனை கட்டுவதற்கு முன்பே ஆலோசிக்க வேண்டும். அதாவது நீங்கள் வீடு கட்ட ஆரம்பிக்கும் மாதத்தை பொறுத்து அதன் பலன்கள் காணப்படும். அதனை தெரிந்து கொண்டு வீட்டை கட்ட ஆரம்பியுங்கள்.
வீடு கட்டுவது என்பது பலரின் கனவு. வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு எப்படியாவது ஒரு சொந்த வீட்டை கட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கும். இதற்காக பணத்தை சேமித்து வைத்து வீடு கட்ட காத்திருப்பார்கள். ஆனால், அதற்கான நல்ல நேரம் வராது. எதோ வகையில் தடை வந்துக்கொண்டே இருக்கும். சில நேரங்களில் வீடு கட்ட ஆரம்பித்து இருப்பார்கள். ஆனால் அந்த பணிகள் சீக்கிரம் முடியாது. வருடங்கள் ஆகிவிடும். சரி எந்த மாதத்தில் வீடு கட்டலாம்? எந்த மாதத்தில் வீடு கட்டினால் நன்மை வரும் என்பது குறித்து பார்க்கலாம்.
வருடத்தில் உள்ள 12 மாதங்களில் வீடு கட்டினால் ஒவ்வொரு பலன் இருக்கும். அவற்றை வரிசையாக பார்க்கலாம். சித்திரை மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் வீண் செலவு உண்டாகும். வைகாசி மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் செயலில் ஜெயம் ஏற்படும். ஆனி மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் மரண பயம் ஏற்படும்.
வாஸ்து நாட்கள்: ஆடி மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் வீட்டில் உள்ள கால்நடைகளுக்கு நோய் உண்டாகும். ஆவணி மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் குடும்ப உறவில் ஒற்றுமை ஏற்பட்டு சுபிட்சம் உண்டாகும். புரட்டாசி மாதத்தில் வீடு கட்டினால் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும்.
ஐப்பசி மாதத்தில் வீடு கட்டினால் உறவினரால் கலகம் உண்டாகும். கார்த்திகை மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் லட்சுமி தேவியின் அருளும் ஆசியும் கிடைக்கும். மார்கழி மாதத்தில் வீடு கட்டினால் வீடு கட்ட ஆரம்பித்தால் சுவர் எழுப்ப முடியாமல் தொடர்ந்து தடைகள் வந்த வண்ணம் இருக்கும்.
தை மாதத்தில் வீடு வீடு கட்ட ஆரம்பித்தால் கடன் சுமை அதிகரிக்கும் தவிர அக்கினி பயம் உண்டாகும். மாசி மாதத்தில் வீடு கட்டினால், சகல சௌபாக்கியம் கிடைக்கும்
பங்குனி மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் பொன், பொருள், பண விரயம் உண்டாகும்.
Read More: 6ஆம் கட்ட வாக்குப் பதிவு நிறைவு!! மேற்குவங்கம்தான் டாப்!! முழுவிவரம் இதோ!!