தங்க நகைளை அடமானம் வைப்பதற்கு எந்த நாள் சிறந்தது? எந்த நாளில் அடகு வைக்கக் கூடாது?
நகையை அடமானம் வைப்பது என்பதே மிகவும் தவறான செயல் என்று ஜோதிடம் கூறுகிறது. வீட்டில் இருக்கும் மகாலட்சுமியை கொண்டு போய் கடையில் அடகு வைப்பதற்கு சமம் ஆகும்.
ஆன்மீகத்தின் படி பார்த்தால் தங்க நகைகளை அடகு வைப்பது நல்லதல்ல என்றாலும், சில நேரங்களில் நம் அவசர தேவைகளுக்காக தங்க நகைளை அடகு வைக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். எனவே, ஜோதிடத்தின்படி எந்தெந்த நாட்களில் தங்கத்தை அடகு வைக்கக் கூடாது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அடகு கடையில் வைத்த நகையை உடனடியாக மீட்க இந்த விஷயங்களையெல்லாம் பின்பற்ற வேண்டும். மற்ற நாட்களில் அடமானம் வைத்தால் நிச்சயமாக உங்களுடைய நகை மீண்டும் எப்படியாவது உங்களை வந்து சேர்ந்துவிடும். ஜோதிடத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. ‘நாளும்-கோளும் செய்யாதது எதுவுமே செய்யாது’ என்பது தான் அந்தப் பழமொழி. அதாவது நாளும் நட்சத்திரமும், கோளும் கோள்களும் நமக்கு செய்யாத ஒரு நல்ல விஷயத்தை வேறு எதுவும் நமக்கு செய்துவிடப் போவதில்லை என்பது தான் இதன் அர்த்தம். அதனால் தான் எந்த ஒரு சுப காரியத்தையும் நாள், நட்சத்திரம் பார்த்து செய்கிறார்கள்.தங்க நகையை அடமானம் வைக்கும் பொழுது நாள், நட்சத்திரம் பார்த்து அதன் பின்னர் அடமானம் வையுங்கள். அடமானம் வைக்கும் பொழுது மீண்டும் அதை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்கிற எண்ணமும் உடன் இருக்க வேண்டும்.
எந்தெந்த நாட்களில் எல்லாம் நகை அடகு வைக்க கூடாது?
1) ஒருவருடைய ஜனன நாள் என்பது மிகவும் முக்கியமான ஒரு நாளாகும். ஆக பிறந்தநாள் மற்றும் ஜனன நட்சத்திரத்தில் தவறியும் நகையை அடமானம் வைத்து விடாதீர்கள்.
2) செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இறை வழிபாட்டிற்குரிய நாளாகக் கருதப்படுவதால், இந்த நாளில் நகையை கொண்டு போய் அடமானம் வைப்பது அவ்வளவு நல்லதல்ல.
3)வீட்டில் விசேஷம் வைத்திருக்கும் நாட்களில் மற்றும் பண்டிகை நாட்களில் நகையை அடமானம் வைக்கக்கூடாது. நகையை அடமானம் வைக்க முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
4) குளிகை நேரத்தில் கட்டாயம் நகையை அடமானம் வைக்க கூடாது. குளிகையில் நாம் செய்யும் செயல் நமக்குத் திரும்பத் திரும்ப நடக்கும் என்பது விதி. குளிகையில் நகையை அடமானம் வைத்தால் அடிக்கடி நீங்கள் நகையை அடமானம் வைக்கும் சூழ்நிலை உருவாகும். நகை வாங்குவதற்கு குளிகை நேரம் மிக சிறந்த நேரம். குளிகையில் நகையை வாங்குவது மேலும் மேலும் நகை நம்மிடம் சேர்வதற்கு நல்ல நேரமாகும்.
5)பிறந்த நட்சத்திரம் மட்டுமல்லாமல் மகம், ஹஸ்தம், அனுஷம், மூலம், சதயம் ஆகிய ஐந்து நட்சத்திரங்கள் வரும் காலங்களில் நகையை தவறியும் நீங்கள் அடகு வைத்து விடாதீர்கள்.
6) உங்கள் வீட்டில் இருக்கும் காலண்டரில் பார்த்தாலே தெரிந்துவிடும். அதே போல் திதி என்று காலண்டரில் போட்டிருக்கும். அதில் பஞ்சமி, தசமி, சஷ்டி, பௌர்ணமி, அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளில் நகையை கட்டாயம் அடமானம் வைக்க கூடாது.
Read More:பிரபல நடிகருடன் கள்ள உறவு..!! ’கோடான கோடி’ பாடல் நடிகைக்கு ரெட் கார்ட்..!! வசமாக சிக்கியது எப்படி..?