எங்கே சமூக நீதி..! அப்பா முதல்வர், மகன் துணை முதல்வர்..! தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்..!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவு கொடுத்தது குறித்து பேசி பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் சமூக நீதி என்பது மற்றவர்களுக்கு மட்டும் தான், நீங்கள் பின்பற்ற மாட்டடீர்களா என்று கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டு அவர் வெளியே வந்துள்ளநிலையில், மீண்டும் அமைச்சராக பதவி வகிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கக்கோரி தமிழக ஆளுநர் ரவிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் அளித்ததையடுத்து, துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் உட்பட 4 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களின் பதவியேற்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணி அளவில் சென்னை ராஜ்பவனில் நடைபெறுவுள்ளது.
நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களின் பதவியேற்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணி அளவில் சென்னை ராஜ்பவனில் நடைபெறுவுள்ளது. மேலும், பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டி.மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலம் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கே. ராமச்சந்திரன், ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்ததற்கும், ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சராக மாற்றப்படுகிறார். சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்படுகிறார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், மனிதவள மேம்பாடு மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வனத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தனுக்கு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பால்வளம், காதி, கிராமத் தொழில்கள் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வசமிருந்த மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு பதிலாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், முதலில் பவள விழா நடத்தி தன கட்சிக்காரர்களை பழுக்க வைத்து விட்டு, அதற்கு பின்பு கூட்டணி கட்சியினரின் மாநாடு நடத்தி, அவர்களையும் ஒத்து ஊத வைத்து, துணை முதல்வர் ஆகி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அப்பா முதல்வர், மகன் துணை முதல்வர், எங்கே போனது சமூக நீதி, எங்கே போனது சம வாய்ப்பு, எங்கே போனது பெண் உரிமை. திமுகவினர் பேசுவது ஒன்று, நடப்பது ஒன்று என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். இது முடி ஆட்சியா இல்லை குடி ஆட்சியா. அப்பாவும் மகனும் ஒரு ஆட்சியை நடத்த வேண்டும் என்பதால் மூத்த அமைச்சர்கள், அண்ணன் பொன்முடி போன்றவர்கள் பதவி இறக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஒருவர் துணை முதலவர் இன்னொருவர் பிணை அமைச்சர்.
ஊழல் குற்றச்சாட்டில் உள்ள போனவர் ஜாமினில் வெளிவந்து இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில் அவருக்கு அமைச்சர் பதிவாயை கொடுத்து இருக்கிறார். இந்த ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியவர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள். ஆட்சி அதிகாரத்தில் எங்களுக்கு பங்கு இருக்கு என்று சொன்ன பட்டியல் இனத்தவர் யாரையாவது, துணை முதல்வர் ஆக்கி இருக்கலாமே. அப்போ சுமூக நீதி என்பதெல்லாம் வெறும் வாய்ச்சொல் தானா, மற்றவர்களுக்கு மட்டும் தான், நீங்கள் பின்பற்ற மாட்டடீர்களா. இது அப்பட்டமாக செயற்கை முரையில் ஏற்படுத்தியுள்ள மூடி சூடு விழா, மக்களை இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கலைஞரின் பேரன், முதல்வரின் மகன் என்ற தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதிவை கொடுத்தால் மற்றவர்களுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும். கட்சியில் அடிமட்டத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களாக வளர்ந்த மற்றவர்களுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும். ஒரு கட்சி என்றல் எல்லோரின் உழைப்பினாலும் தான் கட்சி வளர்கிறது. அது உங்களை கட்சி விவகாரம் என்றாலும் கூட, தமிழகத்தில் அனுபவம் இல்லாத ஒருவரை துணை முதல்வராக கொண்டு வந்து மூடி சூடுவது ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று. இது தமிழக அரசியலில் ஒரு தவறான முன்னுதாரணம் என்று கூறினார்.
இதையும் படிங்க: குட் நியூஸ்..! தீபாவளிக்கு ரேஷனில் இலவச அரிசி…! முதல்வர் அறிவிப்பு…!