வங்கதேசத்தில் இருந்து தப்பி வந்த ஷேக் ஹசீனா இப்போது எங்கு இருக்கிறார்..? அடுத்ததாக எங்கு குடிபெயர்கிறார்..?
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். நாடு முழுவதும் ஏற்பட்ட பதற்றமான சூழலை அடுத்து, இந்தியாவில் அவர் தஞ்சம் புகுந்துள்ளார். விரைவில் இங்கிலாந்தில் அவர், குடிபெயர உள்ள நிலையில், வங்கதேசத்தில் பிரச்சனை முடிவுக்கு வரும் வரை இந்தியாவிலேயே இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
76 வயதாகும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, கடந்த ஒருமாதமாக வங்கதேசத்தில் நடக்கும் வன்முறையை கட்டுப்படுத்த தவறிவிட்டார். தற்போது இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்ததால், உயிருக்கு பயந்து அந்நாட்டை விட்டே தப்பியோடிவிட்டார். இங்கிலாந்தில் உள்ள அவரது சகோதரி ரெஹானா அவருக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறார். இங்கிலாந்தில் ஷேக் ஹசீனாவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டவுடன் அவர், இந்தியாவில் இருந்து புறப்பட உள்ளார்.
வங்கதேசத்தில் நடந்தது என்ன..?
அரசு வேலைகளில் சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்யக் கோரி அந்நாட்டு மாணவர்கள் கடந்த மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைதியாக தொடங்கிய இந்த போராட்டங்கள், திடீரென வன்முறையாக மாறி வங்காளதேசம் முழுவதும் பரவியது. 1971 போரில் கலந்து கொண்ட வீரர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலைகளில் 30% இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
இந்த வன்முறை காரணமாக சமீபத்தில் உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்தது. இருப்பினும், இது போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. இந்த வன்முறையில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
Read More : உங்கள் குழந்தை உங்களிடம் பொய் சொல்கிறதா..? அப்படினா இந்த டிப்ஸை பாலோ பண்ணி பாருங்க..!!