For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பரந்தூர் விமான நிலையம் வேறு எங்கு கட்டணும் சொல்லுங்க...? நடிகர் விஜய்க்கு அண்ணாமலை சரமாரியாக கேள்வி...!

Where else should Paranthur Airport be built?... Actor Vijay gets a barrage of questions from Annamalai
05:20 AM Jan 21, 2025 IST | Vignesh
பரந்தூர் விமான நிலையம் வேறு எங்கு கட்டணும் சொல்லுங்க     நடிகர் விஜய்க்கு அண்ணாமலை சரமாரியாக கேள்வி
Advertisement

பரந்தூரில் மக்களை சந்தித்த விஜய், விமான நிலையம் வேறு எங்கு கட்ட வேண்டும் என்ற தீர்வையும் கொடுத்திருக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி, சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 13 கிராமங்களில் இருந்து 5100 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து 910 நாட்களுகளாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பரந்தூர் மக்களுக்கு ஆதரவாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டிலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று தொடர் போராட்டம் நடத்தி வந்த கிராம மக்களை தவெக தலைவர் நடிகர் விஜய் சந்தித்து பேசி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பரந்தூரில் மக்களை சந்தித்த விஜய், விமான நிலையம் வேறு எங்கு கட்ட வேண்டும் என்ற தீர்வையும் கொடுத்திருக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; சென்னை விமான நிலையம் வெறும் ஆயிரம் ஏக்கரில் மட்டுமே அமைந்துள்ளது. டெல்லி, ஹைதராபாத் விமான நிலையங்கள் 5 ஆயிரம் ஏக்கரிலும், பெங்களூரில் 4 ஆயிரம் ஏக்கரிலும் விமான நிலையம் அமைந்துள்ளது. சென்னை வளர்ச்சி அடைந்து வருவதால், ஆயிரம் ஏக்கரை வைத்துக் கொண்டு விமான நிலையத்தை எப்படி நடத்த முடியும். சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு இரண்டரை கோடி பயணிகளை கையாளுகிறது. இதுவே அடுத்த 10 ஆண்டுகளில், ஆண்டுக்கு 10 கோடி பயணிகள் என்ற நிலை உருவாகும். எனவே, சென்னைக்கு புதிய விமான நிலையம் வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

தமிழகத்தில் விமான நிலையம் அமைவதற்கான இடத்தை மாநில அரசுதான் தேர்வு செய்கிறது. 2019-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், விமான நிலையம் அமைவதற்காக இடத்தை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு அனுப்பிய பட்டியலில் பரந்தூரும், மாமண்டூரும் இடம்பெற்றிருக்கிறது. 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மாமண்டூரை நீக்கிவிட்டு பரந்தூர், பண்ணூரை தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பியது.

இதில் மத்திய அரசு பல ஆய்வுகள் நடத்திய பிறகுதான், மாநில அரசு அனுப்பிய பட்டியலில் இருந்து பரந்தூரை தேர்வு செய்தது. அதிமுக, திமுக ஆகிய இரண்டு அரசுகளும் அனுப்பிய பட்டியலில் பரந்தூர் இடம் பெற்றிருந்தது. இடத்தை தேர்வு செய்ததில் மத்திய அரசுக்கு ஒரு சதவீதம் கூட பங்கு கிடையாது. சென்னை அருகில் விமான நிலையம் வேண்டும் என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். அதை எங்கு கட்ட வேண்டும் என்பதை தேர்வு செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசினுடையது.

சென்னைக்கு அருகில் விமான நிலையம் வேண்டாம் என்கிறாரா விஜய், விமான நிலையம் வேண்டும் என்றால், எந்த இடத்தை தேர்வு செய்து அவர் கொடுப்பார், ஏனென்றால், பரந்தூரில் மக்களை சந்தித்த விஜய், விமான நிலையம் வேறு எங்கு கட்ட வேண்டும் என்ற தீர்வையும் கொடுத்திருக்க வேண்டும். டங்ஸ்டன் பிரச்சினை வேறு, விமான நிலைய பிரச்சினை வேறு என்றார்.

Tags :
Advertisement