’சாம்பியன்ஸ் டிராஃபி’ விளையாடும் இந்திய அணியில் இந்த வீரர்கள் எங்கே..? கொந்தளிக்கும் ரசிகர்கள்..!! ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்குகள்..!!
சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரின் இந்திய அணி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ரோகித் சர்மா கேப்டனாகவும், துணை கேப்டனாக சுப்மன் கில்லும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அணியில், 'விராட் கோலி, ஜெய்ஸ்வால், ஸ்ட்ரேயாஸ் ஐயர், கேல்.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாசிங்கடன் சுந்தர், குல்தீப், ஷமி, அர்ஷிப்தீப் சிங்' உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
2025ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட இருக்கிறது. இதற்கான அணி வீரர்கள் யார் யார் என பிசிசிஐ தேர்வுக் குழுவின் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் அணியை அறிவித்தனர். இந்த தொடருக்கான அணியில் பும்ரா பெயரும் இடம்பெற்றுள்ளது. ஆனால், அவர் தற்போது காயத்தில் இருப்பதால், அவரின் இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ பிரிவில், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் விளையாட உள்ளது. அதேபோல் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில், இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் பாகிஸ்தானில் இல்லை. மற்ற அணிகள் பாகிஸ்தானில் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ரோகித் சர்மா கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள். மேலும், விராட் கோல், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்ட்யா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து ஒருநாள் தொடரில் பும்ராவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா மட்டும் இடம்பெற்றுள்ளார். இது ஒரே ஒரே மாற்றம் தான். மற்றபடி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இடம் பெற்ற அதே இந்திய அணி இங்கிலாந்து ஒருநாள் தொடரிலும் விளையாடுகிறது. சஞ்சு, சிராஜ், வருண் சக்ரவர்த்திக்கு இந்திய ஒருநாள் அணியில் இடம் அளிக்கவில்லை.
’சாம்பியன்ஸ் டிராஃபி’ இந்திய அணி வீரர்கள் தேர்வு சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட அணியில் நிதிஷ் ரெட்டி, சிராஜ் உள்ளிட்டோர் இடம்பெறாததது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. Heart Breaking இமோஜியுடன் #NitishReddy, #Siraj ஹேஷ்டேக்கில் அவர்கள் அண்மையில் சிறப்பாக விளையாடிய வீடியோக்களை நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.