For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"நீட் ரத்து ரகசியம் எப்போது தான் வெளியில் வரும்?" உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி..!

'When will the NEET cancellation secret come out?' Edappadi Palaniswami severely criticized Udayanidhi Stalin..!
12:00 PM Aug 17, 2024 IST | Kathir
 நீட் ரத்து ரகசியம் எப்போது தான் வெளியில் வரும்   உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
Advertisement

நாடு முழுவதும் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவுகள் பல்வேறு விவாதங்களை எழுப்பி உள்ளது. நீட் தேர்வில் வினாத்தாள்கள் கசிய விடப்பட்டதாகவும், முறைகேடாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் மாணவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு, தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகிறது. நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாளை முன்கூட்டியே விற்பனை செய்ததாக உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

Advertisement

தஞ்சை மாவட்டம் சிலம்பங்காடு கிராமத்தை சேர்ந்த தனுஷ், 2 வருடங்களாக நீட் தேர்வு எழுதி இரண்டு முறை தோல்வி அடைந்துள்ளார். இதனால் கடந்த சில தினங்களாக விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது, சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், 40 எம்பிக்களை வைத்து நாடாளுமன்றத்தில் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் ஸ்டாலின் அவர்களே? வாரிசு அமைச்சர் சொன்ன அந்த நீட் ரத்து ரகசியம் எப்போது தான் வெளியில் வரும்? என திமுக அரசையும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி அவர்களின் பதிவில், "தஞ்சாவூர் மாவட்டம் சிலம்பவேளங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவர் தனுஷ், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாததால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. நீட் ரத்து என்ற பெயரில் அரசியல் நாடகம் நடத்தும் விடியா திமுக முதல்வர், தன்னுடைய ஒன்றுக்கும் உதவாத வெற்று விளம்பரப் பேச்சுகளை நம்பி ஏமாந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் மாணவர்களின் ரத்தக் கறைகள் தனது கைகளில் இருப்பதை உணரவேண்டும். 40 எம்பிக்களை வைத்து நாடாளுமன்றத்தில் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் முக.ஸ்டா லின் அவர்களே? வாரிசு அமைச்சர் சொன்ன அந்த நீட் ரத்து ரகசியம் எப்போது தான் வெளியில் வரும்? இன்னும் எத்தனை மாணவச் செல்வங்கள் உயிரிழப்பதை நாம் பார்க்க வேண்டும்?

நீட் ரத்து விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றும் விடியா அரசுக்கு கடும் கண்டனம். இனியாவது நீட் ரத்து குறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் ஏதேனும் இருப்பின் மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன். மாணவச் செல்வங்களே- உயிர் என்பது இன்றியமையாத ஒன்று. அதனை இழக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் உங்கள் மனதில் வரக்கூடாது. வாழ்வில் பல சோதனைகள் வந்தாலும் அதனை நேரே எதிர்கொண்டு சாதனைக் கற்களாக மாற்றப் பாருங்கள். இந்த உலகத்தில் உங்களுக்கென்ற ஒரு அற்புதமான இடம் எப்போதும் இருக்கும் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement