முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

டிசம்பர் மாதத்தின் உரிமைத்தொகை ரூ.1,000 எப்போது வரும்..? சந்தேகம் தான்..!! ஏன் தெரியுமா..?

08:14 AM Dec 08, 2023 IST | 1newsnationuser6
Advertisement

சென்னையில் டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த மழையின் அளவு 400 மி.மீ. என பதிவாகியுள்ளது. 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தை போல் சென்னையே மிதந்து வருகிறது. புயலும், மழையும் நின்ற நிலையிலும் ஆங்காங்கே மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கழுத்தளவு நீரில் தாமாக வெளியே வருவது எல்லாம் ஆபத்தையே கொடுக்கும் என்பதால் பலர் வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றன.

Advertisement

பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டியுள்ளது. வெள்ள புயல் நிவாரணமாக முதற்கட்டமாக ரூ.2,000 கோடியை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் புயல், கனமழையால் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.10 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி கலைஞர் உரிமைத் தொகையான ரூ.1,000 பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால், இம்மாதம் 15ஆம் தேதி வரவு வைக்கப்படாது என தெரிகிறது. டிசம்பர் 20ஆம் தேதிக்கு மேல் வரவு வைக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இல்லாவிட்டால் அடுத்த மாதத்துடன் சேர்த்து வழங்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரூ.1000 உரிமைத் தொகை இந்த மாதம் தாமதமாகவோ அல்லது அடுத்த மாதம் சேர்த்து வழங்கினாலோ விமர்சனங்களுக்குள்ளாக நேரிடும் என்பது அரசுக்கு தெரியும். எனவே, அந்த தொகையை தாமதப்படுத்த மாட்டார்கள் என்கிறார்கள். உரிமைத் தொகை கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. அது முதல் மாதந்தோறும் 15ஆம் தேதி இந்த உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. கடந்த மாதம் தீபாவளி பண்டிகை 12ஆம் தேதி வந்ததால் அதற்கு முன்னரே உரிமைத் தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
தமிழ்நாடு அரசுபெண்கள்மகளிர் உரிமைத்தொகைரூ.1000
Advertisement
Next Article