For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

4 மாவட்டங்களில் கல்லூரிகள் திறப்பு எப்போது..? தேதியை அறிவித்தது கல்லூரி கல்வி இயக்குனரகம்..!!

04:55 PM Dec 09, 2023 IST | 1newsnationuser6
4 மாவட்டங்களில் கல்லூரிகள் திறப்பு எப்போது    தேதியை அறிவித்தது கல்லூரி கல்வி இயக்குனரகம்
Advertisement

புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் வரும் 11ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

'மிக்ஜாம்' புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புயலின் தாக்கத்தினால் பல இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.

இதன் ஒருபகுதியாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளன. இந்நிலையில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் வரும் 11ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Tags :
Advertisement