வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைய என்ன காரணம்? பின்னணி இதோ..
யார் இந்த ஷேக் ஹசீனா?
ஷேக் ஹசீனா செப்டம்பர் 28, 1947ல் பிறந்தார். அவரது தந்தை வங்க தேசத்தின் நிறுவனர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் ஆவர். இவருக்கு ஆரம்பத்தில் அரசியல் மீது விரும்பம் இல்லை. 1966 ஆண்டு ஈடன் மகளிர் கல்லூரியில், படிக்கும் போது அரசியல் மீது ஆர்வம் வரத்தொடங்கியது. 1975 ஆம் ஆண்டு வங்க தேச ராணுவ கிளர்சியின் போது, ஹசினாவின் தாய், தந்தை மற்றும் இரண்டு சகோதரிகள் கொல்லப்பட்டனர். அதனைத்தொடர்ந்து ஆறு ஆண்டுகள் ஹசினா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இந்தியாவில் தஞ்சம் அடைய என்ன காரணம்?
ஐரோப்பாவில் இருந்த ஹசீனாவுக்கு குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட தகவல் அவரது சகோதரி மூலம் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவருக்கு உதவிய ஒரு சில நாடுகளில் இந்தியாவும் இருந்தது. இந்திரா காந்தி அரசு ஹசீனாவுக்கு அரசியல் தஞ்சம் அளித்தது. பங்களாதேஷ் தலைவர் அடுத்த ஆறு வருடங்கள் பண்டாரா சாலை வீட்டில் தங்கினார். 2022 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில், ஹசீனா தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பு காரணங்களுக்காக வெவ்வேறு அடையாளங்களை எடுத்ததாக வெளிப்படுத்தினார். ஐரோப்பாவிலிருந்து திரும்பிய பிறகு, இந்திரா காந்தி ஷேக் ஹசீனாவைச் சந்தித்தார். ஷேக் ஹசீனாவின் கணவரான எம்.ஏ.வசேத் மியாவுக்கும் இந்திய அரசு வேலை வழங்கியது.
ஹசீனா தனது இரண்டு குழந்தைகள் தங்கள் ஆறு வருட நீண்ட நாடுகடத்தலின் போது எவ்வாறு போராடினார்கள் என்பது பற்றியும் கூறினார். 1980களில் நிலைமை எங்கோ மாறத் தொடங்கியது. 1981 ஆம் ஆண்டு வங்க தேசம் திரும்பிய ஹசினா-வுக்கு உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டு வங்க தேசத்தில் முதல் சுதந்திர தேர்தல் நடைபெற்றது. இதில் ஷேக் ஹசினாவில் அவாமி லீக் கட்சி தோல்வி அடைந்தது. பின்னர் 1996 ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார்.
2001 ஆம் ஆண்டு தனது அரசியல் எதிரியான பேகம் கலிதா ஜியாவால் ஹசீனா வெளியேற்றப்பட்டார். இந்த ஆண்டு ஜனவரியில், 12வது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஹசீனா மீண்டும் ஆட்சிக்கு வந்தார். வங்கதேச பிரதமராக அவர் தொடர்ந்து நான்காவது முறையாக பதவியேற்றார்.
Read more ; பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பதால் நினைவாற்றல் பாதிக்கப்படும்..!! – ஆய்வில் தகவல்