முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

என்னது.. ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளா? 69 குழந்தைகளை பெற்றெடுத்த ரஷ்ய பெண்..!! - கின்னஸ் சாதனை

When it comes to human biology, a few questions stir as much curiosity as the limits of female fertility.
05:01 PM Jul 11, 2024 IST | Mari Thangam
Advertisement

ரஷ்யாவில் வாழ்ந்த பெண்மணி ஒருவர் 69 குழந்தைகளைப் பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறார். இந்தத் தகவலை கேட்ட சில பேர் உண்மையிலேயே ஒருவர், இப்படி 69 குழந்தைகளை பெற்றிருக்க முடியுமா? அதற்கு வாய்ப்பு இருக்கிறதா? எனச் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர். 

Advertisement

ரஷ்யாவை சேர்ந்த ஃபியோடர் வாசிலியேவ் என்பவரின் முதல் மனைவி வாலண்டினா. விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்தத் தம்பதிகளுக்கு 16 ஜோடி இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. அந்த வகையில் 32 குழந்தைகள். அடுத்து 7 முறை தலா மூன்று குழந்தைகள் பிறந்திருக்கின்றன. அந்த வகையில் 21 குழந்தைகள். அதேபோல இவர்களுக்கு 4 முறை தலா 4 குழந்தைகள் பிறந்திருக்கின்றன. அந்த வகையில் 16 குழந்தைகள். இப்படியே வாலண்டினாவிற்கு 69 குழந்தைகள் பிறந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் செய்தியை கேட்கும் நம்மில் பலருக்கு வியப்பை ஏற்படுத்தலாம். ஆனால் இந்தத் தகவலை 1782 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி “நிக்கோல்ஸ் மடாலயம்“ எனும் பத்திரிக்கையில் கூறப்பட்டு ஈருக்கிறது. அதேபோல 1783 ஆம் ஆண்டு “ஜென்டில்மேன்“ எனும் பத்திரிக்கையிலும் இந்த அதிசயம் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து விசாரணை செய்த கின்னஸ் ஆய்வுக்குழு இந்தத் தகவலை உண்மை என நிரூபித்து இருக்கிறது. கூடவே Guinness word Book of Reports புத்தகத்திலும் வாலண்டினாவின் பெயரை இடம்பெற இருக்கிறது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் இனப்பெருக்க அறிவியல் மற்றும் மகளிர் சுகாதார ஆராய்ச்சிப் பிரிவின் இயக்குநர் ஜேம்ஸ் சேகர்ஸ் இது குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். ஒரு பெண் இயற்கையாக எத்தனை குழந்தைகளைப் பெற முடியும் என்பதற்கான அடிப்படை வரம்புகளைக் கண்டுபிடிப்பதே எனது நம்பிக்கை. ஆனால், நவீன அறிவியலின் கோட்பாட்டின் படி, ஒரு பெண், நாம் நினைத்ததை விட அதிகமான குழந்தைகளுக்கு தாயாக முடியும் என்பதையும் நான் கண்டுபிடித்தேன்," என்று அவர் கூறினார்.

பெண்களின் கருவுறுதல் பற்றி ஜேம்ஸ் கூறுகையில், பெண்கள் பொதுவாக 15 வயதிற்குள் மாதவிடாய்க்கு ஆளாகிறார்கள், அவர்களின் கருப்பைகள் ஒவ்வொரு 28 நாட்களுக்கும் ஒரு முட்டையை வெளியிடத் தொடங்குகின்றன. மாதவிடாய் நிறுத்தத்தில் முட்டை சப்ளை தீர்ந்து விடும் வரை இந்த அண்டவிடுப்பு தொடர்கிறது, இதன் வழக்கமான தொடக்கம் 51 வயதாகும்.

மாதவிடாய் நிறுத்தப்படுவதற்கு முன்பு, பெண்களின் கருவுறுதல் குறையும், ஒரு பெண்ணுக்கு 45 வயதாக இருக்கும் போது, ஒரு சுழற்சியில் குழந்தை பெறும் வாய்ப்பு மாதத்திற்கு 1 சதவிகிதம் மட்டுமே இருக்கும் என்று கூறியுள்ளார். வாஸ்லியேவ் வழக்கைப் பொறுத்தவரை, 40 வருட கால இடைவெளியில் 27 கர்ப்பங்கள் இருந்திருக்கலாம். அதிலும் இரட்டைக் குழந்தைகள், மூன்று அல்லது நான்கு குழந்தைகள் வழக்கமான கர்ப்பத்தை விட விரைவில் பிறக்க வாய்ப்புள்ளதால், அவர் 40 வருடத்தில் தோராயமாக 18 ஆண்டுகள் கர்ப்பத்தில் கழித்திருக்கலாம் என்றார்.

Read more | கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐ… அடுத்த வாரம் உயர் நீதிமன்றம் விசாரணை…!

Tags :
69 BabiesHistorical RecordsRussia
Advertisement
Next Article