IND Vs ENG | T20, ஒருநாள் தொடர் எப்போது..? நேரடி ஒளிபரப்பை எங்கே பார்ப்பது? - முழு விவரம் உள்ளே..
இந்தியா vs இங்கிலாந்து : இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கான முழுமையான அட்டவணை, போட்டி தொடங்கும் நேரம், லைம் ஸ்ட்ரீம் விவரங்கள் இதோ.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று 3 போட்டிகளில் தோல்வியடைந்தது. ஒரு போட்டி டிரா ஆனது. அணியின் தோல்விக்கு காரணமான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் மீது விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்னதாக, இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் சொந்த மண்ணில் விளையாடுகிறது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி ஜனவரி 22ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜனவரி 22ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது டி20 போட்டி வரும் 25ம் தேதி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. 3வது டி20 போட்டி 28ம் தேதி ராஜ்கோட்டிலும், 4வது டி20 போட்டி 31ம் தேதி புனேயிலும், 5வது டி20 போட்டி பிப்ரவரி 2ம் தேதி மும்பையிலும் நடக்கிறது.
முதல் போட்டி - 22 ஜனவரி - கொல்கத்தா
இரண்டாவது போட்டி - 25 ஜனவரி - சென்னை
மூன்றாவது போட்டி - 28 ஜனவரி - ராஜ்கோட்
நான்காவது போட்டி - 31 ஜனவரி - புனே
ஐந்தாவது போட்டி - 2 பிப்ரவரி - மும்பை.
ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் பிப்ரவரி 6ஆம் தேதியும், 2வது ஒருநாள் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி கட்டாக்கிலும், மூன்றாவது ஒருநாள் போட்டி பிப்ரவரி 12ஆம் தேதி அகமதாபாத்திலும் நடைபெறுகிறது.
இந்தியா vs இங்கிலாந்து தொடர் அட்டவணை 2025 :
பிப்ரவரி 6 - முதல் ஒருநாள் போட்டி, நாக்பூர் (பிற்பகல் 1:30 முதல்)
பிப்ரவரி 9 - இரண்டாவது ஒருநாள் போட்டி, கட்டாக் (பிற்பகல் 1:30 முதல்)
பிப்ரவரி 12 - மூன்றாவது ஒருநாள் போட்டி, அகமதாபாத் (பிற்பகல் 1:30 முதல்)
நேரடி ஒளிபரப்பை எங்கே பார்ப்பது? இந்தியா-இங்கிலாந்து டி20 போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கும், ஒருநாள் போட்டிகள் பிற்பகல் 1.30 மணிக்கும் தொடங்கும். இந்த டி20 மற்றும் ஒருநாள் தொடர் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் பார்க்கலாம். மேலும், இந்தியா மற்றும் இங்கிலாந்து போட்டிகளை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்தில் நேரடியாக பார்க்கலாம்.
இந்திய அணி : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரிலும், அதைத் தொடர்ந்து ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு பிறகு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபிக்குள் நுழைகிறது. எனவே இங்கிலாந்து உடனான தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது.
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் (துணை கேப்டன்) ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்.
இங்கிலாந்து அணி : இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து டி20, ஒருநாள் அணி : ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், ரெஹான் அகமது, ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜேமி ஸ்மித், பிலிப் சால்ட், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் , சாகிப் மஹ்மூத்.
Read more ; ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்.. இனி எங்கும் அலைய வேண்டாம்..!! – மின்சார வாரியம் அசத்தல்