For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'ஸ்குவிட் கேம்' 2-வது சீசன் எப்போது வெளியாகிறது..? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

The second season of popular South Korean series 'Squid Game' will be released on Netflix on December 26.
01:35 PM Aug 01, 2024 IST | Chella
 ஸ்குவிட் கேம்  2 வது சீசன் எப்போது வெளியாகிறது    வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Advertisement

பிரபல தென் கொரிய தொடர் 'ஸ்குவிட் கேம்'-ன் இரண்டாது சீசன் டிசம்பர் 26ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.

Advertisement

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான கொரியன் இணையத் தொடர் 'ஸ்குவிட் கேம்'. கடனில் இருப்பவர்களிடம் பேசி ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறார்கள் சிலர். இதில், விளையாட சம்மதிப்பவர்களை அடையாளம் தெரியாத இடத்தில் அடைத்து வைத்து ஒரு குழு விளையாட்டை நடத்துகிறது. இந்த விளையாட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு பெருந்தொகை வழங்கப்படும். தோல்வி அடைந்தால், அவர்கள் உடனே கொல்லப்படுவார்கள்.

ஒரு சிறிய கதைக் கருவை வைத்து உருவாக்கப்பட்ட இந்த தொடருக்கு தற்போது உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். ஆங்கிலத்தில் வெளியாகி இந்தியாவிலும் பெரிய வெற்றியைப் பதிவு செய்த 'ஸ்குவிட் கேம்' தொடர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியானது. இந்நிலையில், 'ஸ்குவிட் கேம்'-ன் இரண்டாது சீசன் டிசம்பர் 26ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ளது. இதன் 3-வது மற்றும் கடைசி சீசன் 2025ஆம் ஆண்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : விவகாரத்துக்கு பின் சாகும் நிலைக்கு தள்ளப்பட்ட பிக்பாஸ் நடிகை..!! கார்ல தான் தூங்குவேன்..!! என்கூட யாருமே இல்ல..!!

Tags :
Advertisement