தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை எப்போது..? தலைமை ஹாஜி வெளியிட்ட அறிவிப்பு..!!
நேற்று பிறை தென்படாததால் தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை இன்று இல்லை எனவும், நாளை (ஏப்ரல் 11) கொண்டாடப்படும் என்றும் தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ரமலான் பண்டிகை இஸ்லாமியர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பார்கள். நோன்பு காலத்தில் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் இருப்பார்கள்.
ஒவ்வொரு பகுதியிலும் பிறை தெரிவதற்கு ஏற்ப ரமலான் மாதம் தொடங்கும். அந்த வகையில், இந்தாண்டு தமிழ்நாட்டில் பிறை பார்க்கப்பட்டு ரம்ஜான் மாதம் தொடங்கியது. இந்நிலையில், நேற்று ஏப்ரல் 9ஆம் தேதி பிறை தென்படாததால் இன்று ரமலான் கொண்டாடப்படாது. நாளை (ஏப்ரல் 11) தான் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளிகள் அரசு அலுவலகங்கள் வங்கிகள் இயங்காது.
Read More : ”பிரதமர் மோடி இதை மட்டும் செய்துவிட்டால் விலகி விடுகிறோம்”..!! சீமான் சவால்..!!