For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அர்ஜூன் சம்பத் செய்தது ரவுடித்தனம்.. செருப்பை வீசியவர்கள் சங்கி கூட்டம்..!! - விவாத நிகழ்ச்சி பரபரப்பு குறித்து மதிவதனி விளக்கம்

When advocate Madivathani was speaking in the debate program, Hindu People's Party leader Arjun Sampath stormed towards him and there was a big commotion. Madivathani has posted an explanation on his X site
01:51 PM Sep 30, 2024 IST | Mari Thangam
அர்ஜூன் சம்பத் செய்தது ரவுடித்தனம்   செருப்பை வீசியவர்கள் சங்கி கூட்டம்       விவாத நிகழ்ச்சி பரபரப்பு குறித்து மதிவதனி விளக்கம்
Advertisement

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் வழக்கறிஞர் மதிவதனி பேசிக் கொண்டிருந்தபோது இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், அவரை நோக்கி ஆவேசமாக பாய்ந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு விளக்கம் அளித்து மதிவதனி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

தனியார் தொலைக்காட்சி சார்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக சார்பில் எழும்பூர் எம்.எல்.ஏ பரந்தாமன், விசிக சார்பில் எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ், திராவிடர் கழகம் சார்பில் வழக்கறிஞர் மதிவதனி, பாஜக சார்பில் கரு நாகராஜன், இந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜுன் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது, திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் மதிவதனி பேசும்போது, ஆத்திரமடைந்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், எழுந்து சென்று ஆவேசமாக வாக்குவாதம் செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நெறியாளர் மற்றும் விவாதத்தில் பங்கேற்றவர்கள் அர்ஜுன் சம்பத்தை தடுத்து நிறுத்தினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் மதிவதனி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அர்ஜூன் சம்பத் செய்த ரவுடித்தனத்திற்கும், அவர்களின் ஏவல் ஆட்களின் வெற்றுக் கூச்சலுக்கும் எதிர்ப்பு தெரிவித்தும், எப்போதும் நீ எங்கள் பிள்ளை என்ற உணர்வுடன் நேரிலும், தொலைபேசி, ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் என்று அனைத்து தளத்திலும் உடன் நின்ற தோழர்கள் அனைவருக்கும் நன்றி.

அர்ஜூன் சம்பத்தின் செயல் எனக்கு எந்தவித தடுமாற்றத்தையும் கொடுக்கவில்லை. அசிங்கத்தில் துர்நாற்றம் தான் வரும்; அதில் நறுமணத்தையா எதிர்பார்க்க முடியும்? என்ற வகையில் நான் கடந்து சென்றுவிட்டேன். ஆனால் சம்பவத்தை வீடியோவை மூலம் பார்த்த நம் தோழர்கள் அத்தனை ஆதரவு குரலை தந்துள்ளனர். தனித்தனியாக நன்றி சொல்ல முடியவில்லை. பேரன்புகள்!

அண்ணன் செந்தில்வேல் தான் முதலில் அழைத்து இது என்ன பாப்பா? இப்படியா நடந்துக்கிட்டார் என்று ஆத்திரப்பட்டார். அவரிடம் சொன்ன அதே பதிலைத் தான் அதற்கு அடுத்து அழைத்த அனைவருக்கும் சொன்னேன். அவரிடம் அதைத்தான் எதிர்ப்பார்க்க முடியும். மேலும் அவர் நினைத்தது ஒன்று; ! நடந்தது வேறு ஒன்று. தடுமாற வேண்டும் என்று நினைத்துதான், பாய்ந்து வந்தார். கீழ் இருந்து அவர்களின் சங்கி ஆயுதமான 'செருப்பு' வேறு. அவர் வேறு காலில் இருக்கும் செருப்பை கழட்டி மாட்டுகிறார். உண்மையாகவே இது எதுவுமே என்னை சலனப்படுத்தவில்லை. 0.1% கூட பயத்தை தரவில்லை.

அய்யாவின் கொள்கை பயணத்தில் அவர் சந்தித்த எதிர்ப்புகளை வாசித்து, வாசித்து பக்குவப்பட்டு இருப்பது அதற்கு முக்கிய காரணம். அப்பாவுடன் பழகிய பலர், பின்னூட்டங்களில் "சேது அண்ணன் துணிச்சல் , அவரும் வா பாத்துப்போம் என்று நிற்பார்" என்று எழுதியிருந்தார்கள். அது உண்மைதான். அன்றும் இன்றும் என்றும் அப்பாவின் "துணிச்சல்" என்ற சாயலில் அப்படியே இருக்கத்தான் ஆசைப்படுகிறேன். மகிழ்ச்சியோ, பிரச்சனையோ முதலில் அப்பாவை தான் நினைவு கூறுகிறேன்.

சரி, அதெல்லாம் விடுங்க. அவர் அவ்ளோ ரவுடித்தனம் பண்ணாரே, நீங்க என்ன பண்றீங்க என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ச்சி முடிந்தது. அடுத்த நாள் காலை பட்டமளிப்பு விழா, இரவு சேலம் ரயில். இன்று காலை சேலம், மதியம் ஈரோடு நிகழ்ச்சி, இரவு சென்னை. நாளை எம்.சி.சி கல்லூரியில் நிகழ்ச்சி. என்னங்க கடைசி வரை அவர என்ன பண்ணீங்கனு சொல்லவே இல்ல? அதான் சொல்கிறோம் அவுங்க செருப்பைத் தூக்கட்டும்; நம்ம புத்தகத்தோடு பயணிப்போம்!

உடன் நின்ற அனைவருக்கும் பேரன்பும் நன்றியும். அரங்கத்திலேயே தங்கள் கண்டனக் குரலை வலிமையாக எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர்கள் பரந்தாமன், ஆளூர் ஷாநவாஸ் ஆகியோருக்கு நன்றி. இறுதி வரை பக்கபலமாக இருந்த கழகத் தோழர்களுக்கு பேரன்புகள். அத்தனை பணி சுமைகளிலும் தொடர்புக் கொண்டு, தொடர்ந்து பேசுங்க பாத்துக்கலாம் என்று ஆற்றுப்படுத்திய தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அண்ணன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அண்ணன் டிஆர்பி ராஜா ஆகியோருக்கும் நன்றி!" எனத் தெரிவித்துள்ளார் மதிவதனி.

Read more ; வழுக்கை தலை பிரச்சனைக்கு குட் பாய் சொல்லுங்க..!! வியக்க வைக்கும் புதிய ஆராய்ச்சி முடிவு..

Tags :
Advertisement