முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குட்டீஸ்களுக்கு ஆரோக்கியமான கோதுமை நூடுல்ஸ் சூப்..! ஈஸியாக செய்யலாம் வாங்க.!

05:55 AM Jan 11, 2024 IST | 1newsnationuser5
Advertisement

சுவையான கோதுமை நூடுல்ஸ் சூப் : இந்த நூடுல்ஸ் சூப் குழந்தைகளுக்கு பிடித்ததுடன் இது ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது. இந்த ஆரோக்கிய உணவை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவதால் அடிக்கடி வீட்டில் செய்யலாம். மிகவும் எளிமையான வழிமுறைகளில் இந்த கோதுமை நூடுல்ஸ் சூப்பை எப்படி செய்வது என பார்க்கலாம். 

Advertisement

தேவையான பொருட்கள் : காய்கறிகள், கோதுமை நூடுல்ஸ், மிளகுத்தூள், ஸ்வீட் கார்ன், சோள மாவு, பட்டர், வெங்காயம், சோயா சாஸ், ஸ்ப்ரிங் ஆனியன், பூண்டு, உப்பு, மல்லித் தழை

செய்முறை : பதமாக ஸ்வீட் கார்ன் மற்றும் கோதுமை நூடுல்ஸை எடுத்து வேக வைத்து கொள்ளவும். அதன் பின் அடுப்பில் கடாயை வைத்து, அது சூடானவுடன் அதில் பட்டரை சேர்த்து உருக வைக்கவும். உருகியதும், அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் மற்றும் மற்ற காய்கறிகள் சேர்த்து நன்றாக வதக்கவும். பின், அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும், சூப்பில் மிளகுத்தூள், வேக வைத்த நூடுல்ஸ் மற்றும் சோயாசாஸ் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். மற்றொரு கிண்ணத்தில் சோளமாவை போட்டு, தண்ணீரில் நன்றாக கட்டியில்லாமல், கரைத்து அதனை சூப்பில் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லி, மற்றும் ஸ்ப்ரிங் ஆனியன் போட்டு சாப்பிட்டால் சுவையான கோதுமை நூடுல்ஸ் சூப் ரெடி.!

Tags :
Kutties speciallife styleNoodlesWheat noodles
Advertisement
Next Article