"இனி உங்க ஃபேவரைட் நபர்களுக்கு.." 'One Touch Call'.! வாட்ஸ்அப் புதிய அப்டேட்டில் வரும் அசத்தலான வசதி.!
அழைப்புகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களுக்கு பெரும்பானவர்களால் பயன்படுத்தப்படும் செயலியாக இருப்பது வாட்ஸ்அப். மெட்டா நிறுவனத்தின் அங்கமாக விளங்கும் வாட்ஸ்அப் இன்ஸ்டன்ட் மெசேஜ் செயலிகளில் முதன்மையானதாக இருக்கிறது. இது பயனர்களின் பயன்பாட்டு தரத்தை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.
தற்போது விருப்பமான நபர்களுக்கு எளிதாக கால் செய்யும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை உருவாக்கி வருகிறது. இந்த அப்டேட் ' iOS' பயனர்களுக்கு விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த புதிய வசதியை விருப்பமான காண்டாக்ட் நம்பர்களை தேர்வு செய்ய பயனர்களை அனுமதிக்கும். இந்த புதிய வசதியின் மூலம் வாட்ஸ்அப் அழைப்பு தகவல்களில் இருந்து விருப்பமான அழைப்புகளை விரைவாக மேற்கொள்வதற்கு ஷார்ட் கட் வசதிகளை வழங்குவதன் மூலம் இந்த செயலியின் ஒட்டுமொத்த பயன்பாட்டு தரத்தையும் மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும்.
வாட்ஸ்அப் செயலியில் வர இருக்கும் இந்த புதிய அம்சத்தை 'WABetaInfo' கண்டறிந்து இருக்கிறது. இந்த புதிய அப்டேட்டின் மூலம் வாட்ஸ்அப் அழைப்பு தரவுகளில் பயனர்களின் விருப்பமான தொடர்பு எண்கள் மற்ற எங்களுக்கு மேலே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இதனால் பயனர்கள் ஒரே கிளிக்கில் தங்களது விருப்பமான நபர்களுக்கு அழைப்பு மேற்கொள்ளலாம் .
இது தொடர்பாக மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் " இந்த புதிய அப்டேட் பயனர்களுக்கு புதுவித அனுபவத்தை தரும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் தங்களுக்கு விருப்பமான நபர்களுடன் ஈசியாக அழைப்புகளை மேற்கொள்ள தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தி இருப்பதாக தெரிவித்திருக்கிறது. உங்களுக்கு விருப்பமான நபர்களின் மொபைல் எண்களை பேவரைட் என்று குறிப்பிடுவதன் மூலம் இந்த புதிய வசதியை பயன்படுத்தி எளிதாக கால் செய்யலாம்" என தெரிவித்துள்ளது. தற்போது இந்த அம்சம் உருவாக்கத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கும் மெட்டா நிறுவனம் வர இருக்கின்ற புதிய அப்டேட்டில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.