’வாட்ஸ் அப் பயனர்களே உஷார்’..!! ’இப்படியும் உங்களை ஏமாற்றுவார்கள்’..!! சைபர் கிரைம் எச்சரிக்கை..!!
வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளில், புதிய எண்களில் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து, அவர் நமக்குத் தெரிந்தவர் தான் என்று நம்பி பணத்தை ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இந்தாண்டில் நடந்த அதிகபட்ச சைபர் குற்றங்கள் சென்னையில் தான் பதிவாகியிருக்கிறது. அடுத்த இடங்களில் தாம்பரமும் ஆவடியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, தமிழ்நாட்டில் பதிவான ஒட்டுமொத்த சைபர் குற்றங்களில் 21% குற்றங்கள் சென்னையில் பதிவாகியுள்ளது. சைபர் குற்றங்கள் நடந்தால் 1930 தொலைபேசி எண்ணில் அழைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சைபர் கிரைம் மூலம் மோசடி செய்யப்படும் பணம் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள ஏடிஎம்களில் பணமாக எடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மக்கள் விழிப்புணர்வுடன் இல்லாவிட்டால், சைபர் க்ரைம் மூலம் மோசடி செய்யப்படும் பணத்தை திரும்பப் பெறுவதும் கடினம் என்று எச்சரித்துள்ளனர்.
ஒரு மோசடி இப்படி நடக்கிறது என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுமே, மோசடியாளர்கள் புதிய வகையான மோசடியை கண்டுபிடித்துவிடுகின்றனர். சில மோசடியாளர்கள், வாட்ஸ் அப் அடையாள படங்களை திருடி அதன் மூலம் மோசடியில் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது. புதிய செல்போன் எண்களில் இருந்து அழைப்பு வரும்போது, வெறும் படங்களை வைத்து அந்த எண் அவர்களுடையது என யாரும் நம்ப வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.