'வாட்ஸ்அப்' ல் இனி அப்டேட் பண்ண தேவை இல்லையா.? புதிய வசதியை அறிமுகம் செய்த மெட்டா.! விபரங்கள் என்ன.?
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி, தனிநபர் கணக்குகள் மற்றும் சேனல்களுக்கான, மாதாந்திர அறிக்கையை சுயமாக உருவாக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. மாதாந்திர ரிப்போர்ட்டை நாம் ஒருமுறை இயக்கினால் ஒவ்வொரு மாதமும் சுயமாக வாட்ஸ்அப் அக்கவுண்ட் மற்றும் சேனல்களின் தகவல்களை வணங்கும் வகையில் இந்த புதிய வசதி வடிவமைக்கப்பட்டிருக்கிறது . தற்போது இந்த சேவையை 'WABetaInfo' கண்டறிந்துள்ளது.
இந்த புதிய வசதியின்படி, ஒவ்வொரு மாதமும் வாட்ஸ் அப் கணக்கு மற்றும் சேனல்கள் பற்றிய தகவல்களை, சுயமாக உருவாக்க அனுமதிப்பதன் மூலம் பயனர்களுக்கு தங்களின் சேவையில் புதிய அம்சத்தை சேர்த்து இருப்பதாக மெட்டா குறிப்பிட்டுள்ளது. வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது கணக்கு மற்றும் சேனல்கள் பற்றிய அப்டேட் குறித்து ஒவ்வொரு முறையும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
இந்த செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய சேவையின் மூலம் தேவையான நேரத்தில் பயனர்களின் தலையீடு இல்லாமல் தேவையான அப்டேட்டுகள் வழங்கப்படும் என்ன மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்களின் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்தும் விதமாக இந்த புதிய வசதி வெளியிடப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த அம்சம், பயனர்கள் தங்கள் கணக்கிற்காக உருவாக்கப்பட்ட மாதாந்திர அறிக்கைகளை ஒப்பிடுவதன் மூலம் தங்கள் கணக்குத் தகவலில் ஏற்படும் மாற்றங்களை எளிதாகக் கண்காணிக்க அனுமதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மாதாந்திர ரிப்போர்ட்களை தானாக அப்டேட் செய்யும் வசதிகளின் உருவாக்கத்தில் புதிய அப்டேட் வருங்காலத்தில் உருவாக்கப்படும் எனவும் மெட்டா தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் அருகில் இருக்கும் நபர்களிடம் பாதுகாப்பான தகவல் பரிமாற்றங்கள் மற்றும் ஆவணங்களை பகிர்ந்து கொள்ளும் வசதியில் புதிய மாற்றங்கள் செய்ய இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. அதன்படி நமக்கு அருகில் இருக்கும் நபர்களிடம் ஆவணங்களை பகிர்ந்து கொள்ள 'people nearby' என்ற வசதியின் மூலம் பாதுகாப்பாக ஆவண பரிமாற்றங்கள் செய்து கொள்ளலாம் எனவும் மெட்டா அறிவித்திருக்கிறது.