சைபர் குற்றங்களுக்கு "வாட்ஸ் அப்" தான் டார்கெட்!. உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!
Cyber Crime: சைபர் குற்றங்களுக்கு அதிகம் பயன்படுத்தும் தளமாக வாட்ஸ் அப் உள்ளது என்று உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2024ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வாட்ஸ் அப் மூலமான இணைய மோசடி தொடர்பாக 43,797 புகார்களும் அதனைத் தொடர்ந்து டெலிகிராமுக்கு எதிராக 22,680, இன்ஸ்டாகிராமுக்கு எதிராக 19,800 புகார்களும் பதிவாகியுள்ளன. இது தொடர்பான மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2023-24 அறிக்கையில், "சைபர் குற்றங்களில் அதிகம் ஈடுபடுபவர்கள் தங்களின் குற்றச்செயல்களுக்கு கூகுள் சேவைத்தளங்களையே பயன்படுத்துகின்றனர். முதலீட்டு மோசடி ஒரு உலகளாவிய நிகழ்வு, இது மிகப்பெரிய அளவில் பண மோசடி மற்றும் சைபர் அடிமைத்தனத்தினை உள்ளடக்கியுள்ளது.
வேலையில்லா இளைஞர்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள் மற்றும் தேவை உள்ள மக்களே இக்குற்றங்களுக்கான இலக்குகள். இவர்களே அதிக அளவிலான பணத்தினை இழக்கின்றனர். நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கடன் பயன்பாடு போன்ற செயலிகளுக்கான செயல்களின் சமிக்கைகள், கூகுளின் சைபர் டொமைன்களை சைபர் குற்றவாளிகள் தவறாக பயன்படுத்துதல், ஆண்ட்ராய்டு பேங்கிங் மால்வர் போன்றவை குறித்து பகிர்ந்து கொள்வதற்கு I4C கூகுள் மற்றும் ஃபேஸ்புக்குடன் கூட்டு சேர்ந்துள்ளது.
இந்தியாவில், கட்டமைக்கப்பட்ட சைபர் குற்ற நடவடிக்கையான சட்டவிரோத கடன் செயலிகள் தொடங்குவதற்கு நிதியுதவி அளிக்கப்படும் ஃபேஸ்புக் விளம்பரங்கள் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய இணைப்புகள் முன்கூட்டியே அடையாளம் காணப்பட்டு, தேவையான நடவடிக்கைக்காக ஃபேஸ்புக் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்துடன் பகிரப்படுகின்றன.
சட்ட அமலாக்கத்துறைகள், தடயவியல் ஆய்வாளர்கள், சைபர் பாதுகாப்பில் பயிற்சி அளிப்பதற்காக வழக்கறிஞர்கள், நீதிபதிகள், சைபர் குற்றங்களை விசாரிக்கும் அமைப்புகள், நாடுமுழுவதிலும் உள்ள டிஜிட்டல் தடயவியல் நிறுவனங்கள் என குற்றவியல் நீதி அமைப்பின் அனைத்து அங்கங்களின் திறன்களை வளர்ப்பதற்கான முயற்சிகளை I4C மேற்கொள்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.