"ஸ்கிரீன் லாக் செய்தாலும் பிளாக் செய்யலாம்.."! Whatsapp புதிய அப்டேட்.!
உலகில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் செய்திகளில் முக்கியமானது வாட்ஸ்அப் . உடனடி குறுஞ்செய்திகள் ஆவண பரிமாற்றம் வீடியோ கால் மற்றும் ஆடியோ கால் என பலவிதமான சேவைகளையும் வழங்கி வருகிறது. வாட்ஸ்அப் அப்ளிகேஷனில் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு விதமான அப்டேட்களை மெட்டா நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்நிலையில் ஸ்பேம் மெசேஜ் மற்றும் அழைப்புகளை பயனர்கள் தவிர்க்கும் பொருட்டு புதிய வசதி ஒன்றை மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் புதிய அப்டேட்டில் வெளியிட இருக்கிறது. இதன் மூலம் தங்களது ஸ்கிரீன் லாக் செய்யப்பட்டிருந்தாலும் பயனர்கள் ஸ்பேம் மெசேஜ் மற்றும் அழைப்புகளை மேற்கொள்ளும் தொடர்புகளை ப்ளாக் செய்யலாம்.
ஸ்பேம் செய்திகள் பரவுவதை தடுக்கும் நோக்கில் இந்த புதிய அப்டேட் வெளியிடப்படுவதாக மெட்டா அறிவித்திருக்கிறது. இந்த புதிய வசதியின் மூலம் பயனர்களுக்கு செய்திகளை பரிமாறும் அனுபவத்தில் அதிக கட்டுப்பாடுகளை கொடுக்கும் நோக்கிலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது
இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களது செல்போனில் லாக் ஸ்கிரீனில் இருந்தே ஸ்பேம் மெசேஜ்கள் மற்றும் தொடர்புகளை ப்ளாக் செய்ய முடியும். இதன் மூலம் மெட்டா தனது பயனர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பிரைவசியுடன் கூடிய செய்தி பகிரும் அனுபவங்களை கொடுப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது.
இந்த புதிய அப்டேட்டின் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது செல்போனை அன்லாக் செய்யாமலே ஸ்பேம் மெசேஜ்களை பிளாக் செய்யும் வசதியை வழங்குகிறது. உங்களுக்கு ஸ்பேம் மெசேஜ் நோட்டிபிகேஷன் வரும் போது அதனை லாங் பிரஸ் செய்தால் பல்வேறு ஆப்ஷன்களை வழங்கும். அதில் ப்ளாக் ஆப்ஷனும் இருக்கும். மேலும் அந்த காண்டாக்ட் ப்ளாக் செய்யப்பட்ட பிறகு அது தொடர்பாக புகார் அளிப்பதற்கான வசதியையும் இந்த அப்டேட் வழங்குகிறது .
மேலும் வாட்ஸ்அப் அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து செய்தி பரிமாற்றம் நடைபெறும் போது அந்த விவரங்களுக்கு கீழே எச்சரிக்கை குறியை வழங்கியிருக்கிறது. இந்தக் கொடியின் கீழே அந்த தொடர்பை இணைப்பது தடுப்பது மற்றும் தடுத்து புகார் அளிப்பது தொடர்பான விருப்பங்கள் பயனர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தடுக்க விரும்பும் தொடர்பை தேர்ந்தெடுத்து ப்ளாக் செய்யலாம்.
வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த, பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்களைப் பதிவு செய்ய வேண்டும், அவர்களின் தொடர்பு விவரங்களைக் கொண்ட எவருக்கும் செய்திகளை அனுப்ப முடியும். இருப்பினும், இந்த நடைமுறை பிரைவசி தொடர்பான கவலைகளை எழுப்பியுள்ளது. ஃபோன் எண்களை பரிமாறிக் கொள்ளாமல் வாட்ஸ்அப்பில் இணைப்புகளை எளிதாக்கும் முறையை நிறுவனம் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் புதிய அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.