WhatsApp பயனர்களுக்கு குட் நியூஸ்.! இனி விருப்பமான ஃபார்மெட்டில் மெசேஜ் அனுப்பும் புதிய வசதி.! இதன் சிறப்புகள் பற்றிய முழு விபரம.!
வாட்ஸ்அப் WhatsApp நாம் எழுதும் டெக்ஸ்ட் மெசேஜ்களை நமது விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைக்க புதிய ஃபார்மேட்டுகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. பயனர்கள் தங்களது மெசேஜ்களை ஸ்டைல் செய்ய வாட்ஸ்அப் வழங்கும் புதிய வசதியைப் பற்றி இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜ் அனுப்பும் செயலியான வாட்ஸ்அப் WhatsApp நாம் எழுதும் டெக்ஸ்ட் மெசேஜ்களை நமது விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைக்க புதிய ஃபார்மேட்டுகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. பயனர்கள் தங்களது மெசேஜ்களை ஸ்டைல் செய்ய வாட்ஸ்அப் வழங்கும் புதிய வசதியைப் பற்றி இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம். பயனர்கள் தங்கள் மெசேஜ்களை டைப் செய்யும் போது எழுத்துக்களை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைப்பதற்கான புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதில் புல்லட் மற்றும் நம்பர்களை குறிப்பிட்டு எழுத்துக்களை பட்டியலிடுவதற்கான புதிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இவற்றிற்கான ஷார்ட் கட்களும் உருவாக்கப்பட்டுள்ளது.பிளாக் மேற்கோள்கள் மற்றும் இன்லைன் குறியீடு ஆகியவை இந்த புதிய அப்டேட்டில் அடங்கும். இது பயனர்கள் தங்களை வெளிப்படுத்துவதற்கும் தங்களது மெசேஜ்களை ஒழுங்கமைப்பதற்கும் கூடுதல் வழிகளை வழங்குவதாகும்.
புதிய எழுத்து வடிவமைப்பிற்கான எளிய வழிகள்:
புல்லட் லிஸ்ட்: பயனர்கள் ஒரு கோடு குறியீட்டை(-) உள்ளீடு செய்வதன் மூலம் புல்லட் லிஸ்ட்டை உருவாக்கலாம். அதனைத் தொடர்ந்து ஒரு ஸ்பேஸ் கொடுத்து அவர்களது செய்தியை உள்ளீடு செய்வதன் மூலம் புல்லட் லிஸ்ட் ஃபார்மேட்டில் செய்திகளை பதிவிடலாம்.
நம்பர் லிஸ்ட் : நம்பர் லிஸ்ட் முறையில் செய்திகளை அனுப்ப பயனர்கள் ஒரு நம்பரை டைப் செய்த பின்பு ஒரு குறிப்பிட்ட காலத்தை டைப் செய்து ஸ்பேஸ் கொடுத்து செய்தியை டைப் செய்யலாம்.
மேற்கோள்கள்: வாட்ஸ்அப் இப்போது ஒரு எழுத்தை ஹைலைட் செய்து செய்திகளை அனுப்பும் வசதியை இப்போது வழங்குகிறது. இதற்கு ஒரு மெசேஜை டைப் செய்து அனுப்பும் முன் அதை ஹைலைட் செய்ய (>) குறியீடைத் தொடர்ந்து ஒரு ஸ்பேஸ் கொடுத்து டைப் செய்ய வேண்டும்.
இன்லைன் குறியீடு: பயனர்கள் தங்கள் செய்திகளை இன்லைன் குறியீடாக வடிவமைக்க (`) இதனை டைப் செய்ய வேண்டும்.
வாட்ஸ்அப் பயனர்கள் சாட் செய்வதை விட அலுவலக ரீதியாக இந்த செயலியை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதை மெட்டா நிறுவனம் அறிந்திருக்கிறது. எனவே செய்திகளை அனுப்புவதில் இந்த புதிய ஃபார்மேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . இதன் மூலம் பயனர்களின் வேலையை எளிதாக்குவதோடு மெசேஜ் அனுபவத்தையும் மேம்படுத்துகிறது. இந்த புதிய அப்டேட் டெஸ்க்டாப், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் வாட்ஸ்அப்பின் இணையப் பதிப்பு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் கிடைக்கிறது.
பயனர்கள் தங்கள் மெசேஜை இப்போது அவர்களுக்கு ஏற்ற ஃபார்மேட்டில் எடிட் செய்து கொள்ளும் வகையில் இந்த புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் வழங்கி இருக்கிறது. இது வாட்ஸ்அப் மூலமாக தகவல் தொடர்புகளை திறமையானதாக்குகிறது.
குறிப்பாக முக்கியமான தேர்தல் நெருங்கி வரும் வேளையில் டீப் ஃபேக் மற்றும் பொய் செய்திகளுக்கு எதிராக ஹெல்ப்லைன் வசதியையும் வாட்ஸ்அப் தொடங்கி இருக்கிறது. இந்த முன்முயற்சியானது, தகவலைச் சரிபார்க்கவும், தவறான தகவல்களைப் பரப்புவதைத் தடுக்கவும் நம்பகமான ஆதாரத்தை பயனர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
English Summary: WhatsApp introduces new updates intext formatting. This feature available at Ios, Android, Desktop and Web version.